அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

மோகினியுடன் ‘ஒரு நாள்’ தாம்பத்தியம்!!! -மகாபாரதக் கதை!

Googam Kuttantwar Temple Festival: The Holy Prophet ...
மகாபாரதக் குருசேத்திரப் போர் நடக்கவிருந்த நிலையில், தாங்கள் வெற்றி பெறுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்தார்கள் பாண்டவர் குழுவினர்.

சோதிடக்கலையில் வல்லவனான சகாதேவன், “32 அங்க லட்சணங்களும் அமையப்பெற்ற வீரனைக் களப்பலி கொடுத்தால் வெற்றி பெறலாம்” என்றான்.

இதற்கான பட்டியலில் கடவுள் கிருஷ்ணன், அர்ச்சுனன், அர்ச்சுனனின் மகனான அரவான் ஆகிய மூவர் மட்டுமே இடம்பெற்றார்கள்.

கிருஷ்ணன் கடவுள் என்பதாலும், அர்ச்சுனன் பாண்டவர் அணியின் தளபதி என்பதாலும் அரவானைப் பலி கொடுக்கும் நிலை உண்டானது. அரவானும் அதற்குச் சம்மதித்தான். மறுநாள் பலியாகவிருந்த நிலையில்.....

ஒரே ஒரு தடவையேனும் ஒரு பெண்ணுடன் உடலுறவு சுகம் அனுபவிக்க வேண்டும் என்னும் தன் ஆசையை வெளியிட்டான் அரவான். ஆனால், எங்கெல்லாமோ தேடியும், அவனை மணந்துகொள்ள எந்தவொரு பெண்ணும் சம்மதிக்கவில்லை. 

வேறு வழி இல்லாததால், கடவுள் கிருஷ்ணன் மோகினி[பாற்கடல் கடைந்ததில் வெளிப்பட்ட அமுதத்தை, மோகினி வடிவெடுத்துக் கவர்ச்சி நடனமாடி அசுரரை ஏய்த்தாரே அதே மாதிரியான மோகினிதான்] ஒரு நாள் முழுக்க அரவானுக்கு உடலுறவு இன்பத்தை வாரி வழங்கினார்.

மறு நாள் அரவான் பலியிடப்பட்டான். மோகினி விதவைக்கோலம் பூண்டாள்.

இக்கதையுடன் தொடர்புடைய நிகழ்வு, விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் இடம்பெறுகிறது.

சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்கின்றனர். இரவு முழுவதும் தங்களது கணவனான அரவானை வாழ்த்திப் பொங்கல் வைத்துக் கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ச்சியாயிருக்கின்றனர். பொழுது விடிந்ததும் அரவானின் இரவுக் களியாட்டம் முடிவடைகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக்களமான அமுதகளம் கொண்டுசெல்லப்படுகிறான். வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப்படுகின்றது. திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து, பின் வெள்ளைப் புடவை உடுத்து விதவைக் கோலம் பூணுகின்றனர்-விக்கிப்பீடியா].
=============================================================================