அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 9 செப்டம்பர், 2020

‘ஆவிகள்...பேய்கள்’... அசத்தும் ஆராய்ச்சி முடிவுகள்!!!

ரண்ட் போனால் போதும் பக்கதில் யாரோ நிற்பது போன்று தோன்றும், தூங்கலாம் என்று 'லைட் ஆஃப்' செய்துவிட்டு, ஜன்னல் வழியே பார்த்தால் தூரத்தில் யாரோ நின்று நம்மையே 'வெறிக்க வெறிக்க' பார்ப்பது போல தோன்றும், சில நேரம் நம் நிழலே நம்மை பயமுறுத்தும். இப்படியாக, பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய அச்சம், சந்தேகம், நம்பிக்கை, பீதி - நம் எல்லோரிடத்திலும் பொதுவாகவே உண்டு. 

கண்களுக்கு மட்டும் பேய்களும், ஆவிகளும், விசித்திரமான நிழல்களும் தெரிய 10 அறிவியல் காரணங்கள் உள்ளன. அறிவியலை விட பேய்கள் மற்றும் ஆவிகள் மீதுதான் எனக்கு நம்பிக்கை அதிகம் என்று கூறுபவர்கள் வேறு வேலை இருந்தால் கவனிக்கலாம்.

ஏனையோர் தொடர்ந்து வாசியுங்கள்.

பேய் பிசாசுகள் சார்ந்த ஆராய்ச்சியில் அனுதினமும் அதிநவீன அறிவியல் - தொழில்நுட்பங்கள் பயன்படுத்தபடுகின்றன. அதன் விளைவு.....

ஆவிகள் பற்றி 1840 மற்றும் 1850-களில் கண்டுப்பிடிக்கப்படாத உண்மைகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பேய்களையும், ஆவிகளையும் நாம் பார்ப்பது, உணர்வது, எதிர் கொள்ளுவது ஆகியவைகளுக்கு நிஜமான காரணங்களாக 10 அறிவியல் விளக்கங்களைத் தருகிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒன்று:
திடீரென்று நம் கண்களுக்கு தோன்றி மறையும் நிழல் உருவங்கள் போன்ற நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு நம் மூளையின் ஒரு வகையான மின்சார தூண்டல் தானாம் (Electric Stimulation Of The Brain).

இரண்டு: 
ஆவிகளுடன் நடத்தப்படும் உரையாடல்களின் போது நமக்கு கிடைக்கும் பதில்களுக்கு பேய்களோ ஆவிகளோ அல்ல, இடியோமோட்டார் எஃபெக்ட் (Ideomotor Effect) தான் காரணம்[தன்னை அறியாத நிலையில் ஏற்படும் உடல் அசைவுகள் சார்ந்த விளைவுகளைத்தான் இடியோமோட்டார் எஃபெக்ட் என்பர்].

ஆவிகளுடன் தொடர்பு கொள்ள பெரிதளவில் பயன்படுத்தப்படும் ஓவ்ஜா போர்ட்டில் (Ouija board) நம் கைகள் தானாக நகர்வதற்கும் அசைவதற்கும் காரணம் இந்த விளைவு தானாம்..! 

மூன்று:
தானாக ஒரு பொருள் அசைகிறது என்றால் அதற்கு காரணம் ஏதோ ஒரு ஆவியின் சக்தி என்று நினைத்து விடாதீர்கள், அதற்கு காரணம், இன்ஃப்ரா சவுண்ட்(Infrasound) சப்தம்;  அதாவது, மனிதக் காதுகளால் 20,000 ஹெர்ட்ஸ் (Hertz) வரையிலான சப்தங்களை மட்டும்தான் கேட்க முடியும். அதற்குக் கீழ் இருக்கும் ஒலிகளை நம்மால் கேட்க முடியாது. அதாவது, 20 ஹெர்ட்ஸ் ஒலியை நம்மால் கேட்க முடியாது, ஆனால் அதை அதிர்வுகளாய் உணர முடியும். அப்படியான அதிர்வுகள்தான், சில பொருட்கள் தாமாக அசையக் காரணமாகும். பொதுவாக, புயல், பலமான காற்று, வானிலை மாற்றம் போன்றவைகளால் இன்ஃப்ரா சவுண்ட் அதிர்வுகள் அதிகம் ஏற்படுமாம்.

நான்கு:
உங்களுக்கு வரும் ஆவிகள், பேய்கள் சார்ந்த ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் கனவுகளுக்கு காரணம், ஆட்டோமட்டிஸம்(Automatism) என்னும் தன்னை மறந்த நிலை. அதீதமான தன்னை மறந்த நிலையில் கற்பனைகளும், எண்ணங்களும் வேறொரு வழியாக நம்மில் நுழைவதான் ஆட்டோமட்டிஸம் எனப்படும். 

ஐந்து: 
குறிப்பிட்ட அறையின் இடம் மட்டும் குளிர்ச்சியாக இருக்க காரணம், அங்கு ஏதோ ஆத்மா இருக்கிறது என்றோ, பேய் வல்லுநர்கள் சொல்லும் 'கோல்ட் ஸ்பாட்'(Cold spot) என்றோ நினைக்க வேண்டாம். அது, டிராஃப்ட் (Draft) ஆகும். அடைபட்டே இருக்கும் அறைக்குள் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பட்ட உஷ்ணநிலை இருக்கும். ஏதாவது ஒரு வழியாக, சில்லென்ற காற்று நுழையும் போது, சக உஷ்ண நிலையோடு இணையாத குறிப்பிட்ட அந்த இடம் மட்டும் குளிர்ச்சியாய் தோன்றுமாம். 

ஆறு: 
கேமிராக்குள் தூசி படிந்திருக்கும்போது எடுக்கும் புகைப்படங்களில் நிழல் உருவங்கள் அல்லது தெளிவற்ற உருவங்கள் தெரிவது சகஜம். அதை ஆவி, பேய் என்று நினைக்கக் கூடாது.

ஏழு: 
பாழடைந்த பங்களாவிற்குள் செல்பவர், ஒருவேளை மரணம் அடைந்தால் அல்லது மாபெரும் குழப்பத்திற்கு ஆளானால் அதற்குக் காரணம் ஆவிகளோ அல்லது பேய்களோ அல்ல; கார்பான் மோனாக்சைட் பாய்சனிங்(Carbon Monoxide Poisoning) காரணமாகும். நீண்ட காலமாய் அடைக்கப்பட்டுக் கிடக்கும் இடத்தில் கார்பான் மோனாக்சைட் உருவாவது சகஜம்தான். அது இயல்பான சுவாசக் காற்றுக்குப் பதில் உள்ளே சென்றால், அது, மயக்கம், குழப்ப நிலை, அதிகப் பட்சமாக மரணம்வரை கொண்டு செல்லும். 

எட்டு: 
நம்மில் பலரும் பேய், ஆவி, பூதம் எல்லாம் பார்த்ததாகத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அவற்றைப் பார்த்திராதவர்களுக்கும் நம்பத் தோன்றும்.  அதை, மாஸ் ஹிஸ்ட்டிரியா (Mass Hysteria) என்பார்கள்.

ஒன்பது: 
சில குறிப்பிட்ட இடங்களில் நாம் பலவீனாமாக உணர்வோம். அதற்குக் காரணம் அங்கே ஆவிகளின் சக்தி அதிகம் என்று அர்த்தமில்லை - அதற்கு காரணம் ஐயன்ஸ்(Ions). இவை, இயற்கையாகவே வானிலை மாற்றங்கள் மூலம் உருவாகின்றன. நெகடிவ் ஐயன்கள் (Negative Ions) நமக்கு அமைதியையும், ஓய்வையும் தரும். பாசிடிவ் ஐயன்கள் (Positive Ions) தலைவலி மற்றும் உடல் பலவீனத்தை தரும். 

பத்து:
நாம் இறந்து விட்டதை போலவும், நம் உயிரற்ற உடலை நாமே பார்ப்பது போலவும், 'நிஜம் போன்ற' கற்பனை எண்ணங்கள் வரவும் காரணம் பேய் உலகம் சார்ந்த விடயமல்ல; அது மூளைக்குள் ஏற்படும் க்வான்ட்டம் மெக்கானிக்ஸ் விளைவாகும்(Quantum Mechanics). -By Muthuraj | Updated: Thursday, February 1, 2018.