உயிரினங்கள் தோன்றி 3.5 பில்லியன்[1 பில்லியன் = 100 கோடி -விக்கிப்பீடியா] ஆண்டுகள் இருக்கக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆண்டாண்டுக் காலமாக, உயிர்கள் தோன்றுவதும் அழிவதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளன. தோன்றி அழிந்த உயிர்கள் கணக்கில் அடங்காதவை.
தோன்றிய ஒவ்வோர் உயிரும், இம்மண்ணில் வாழ்ந்து இன்பதுன்பங்களை அனுபவித்த பின்னரே அழிவை எய்துகிறது.
ஒவ்வோர் உயிருக்கும் இவ்வுலகில் வாழ்வதற்கான ‘கால அளவு’ நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட காலம் முழுதும் வாழ முடிவதில்லை.
அதற்கான தலையாய காரணங்களில் சில:
*வலிய உயிர்களுக்கு எளிய[வலிமை குறைந்த] உயிர்கள் இரையாதல்
*கடல் கொந்தளிப்பு[சுனாமி], எரிமலை வெடிப்பு, காடுகள் தீப்பற்றி எரிதல், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள்.
*இயல்பான மழை அளவு குறைந்து, உண்ணுதற்கு உணவில்லாத நிலை உருவாதல்[உயிர்கள் பட்டினி கிடந்து செத்தொழிதல்].
*விதம் விதமான நோய்களின் தாக்குதல்.
உயிரினங்கள் மிகக் கொடூரமாய்த் தாக்கி அழிக்கப்படுதலும், இவை போன்ற அவல நிகழ்வுகளும் பல்லாயிரம் கோடி ஆண்டுகளாகத் தொடர்கின்றன.
உயிரினங்கள் தோன்றிய அந்தத் தொடக்க நாள் தொட்டு இந்த நாள்வரை அவை தொடர்கின்றன.
இந்நொடிவரை இந்த நிலையில் கிஞ்சித்தும் மாற்றம் இல்லை.
இந்நிலை இயற்கையானது என்றால் இதை மனதார ஏற்று, காலப்போக்கில் மாறக்கூடும் என்று எண்ணலாம். அதற்கு வழியில்லை. காரணம்.....
அனைத்தையும் படைத்ததோடு அனைத்து நிகழ்வுகளுக்கும் மூலகாரணமானவர் கடவுள்[அவனின்றி அணுவும் அசையாது] என்கிறார்கள் ஆன்மிகர்கள்.
உயிர்களைப் படைத்த அவர் இத்தனை அவலங்களை அவற்றின் வாழ்வில் திணித்தது ஏன்?! காலங்காலமாய் அவை படும் துன்பங்களைப் போக்குதற்கு முயலாமல் நாளும் வேடிக்கை பார்ப்பது ஏன்?!
இந்த வினோத குணம் கொண்ட நபரையா நம் மக்கள் கோயில் குளம் என்றெல்லாம் தேடிப் போய் வழிபடுகிறார்கள்! விழாக்கள் நடத்திக் குதூகளிக்கிறார்கள்!
இவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா, நகைப்பதா எதைச் செய்வதென்று புரியவில்லை!
===============================================================