பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

கடவுளின் முன்னோடிகள்!!

கடவுள் உண்டென்று சொல்லும் ஆன்மிகர்கள்,  வழக்கமாக முன்வைக்கும் ஓர் எடுத்துக்காட்டு, ’ஒரு மண்பானை தானாகத் தோன்றாது. அதைப் படைக்க ஒரு குயவன் தேவை. அது போல, உலகங்களையும் உயிர்களையும் பிறவற்றையும் படைக்கக் கடவுள் தேவை’ என்பதாகும்.

ஒரு குயவன், கண்களை மூடித் திறந்தோ, விரித்த உள்ளங்கையை மேலே உயர்த்தியோ[அபயக்கரம் போல] பானையைப் படைத்ததில்லை; களிமண், நீர் போன்ற மூலப் பொருள்களை சேர்த்து, தண்டச் சக்கரம், தட்டுப் பலகை [பானையைத் தட்டிச் சீர்படுத்தும் கருவி] போன்ற துணைக் கருவிகளைக் கொண்டுதான் படைத்தார்; படைக்கிறார். அது போல, கடவுள் தனக்குரிய மூலப் பொருள்களையும் துணைக் கருவிகளையும் எங்கிருந்து அல்லது எவரிடமிருந்து பெற்றார் என்பது அறியப்படவேண்டிய உண்மை.

அவற்றைக் கடவுள் தனக்குள்ளிருந்தே  என்றும் சொல்லப்படுவதுண்டு. அது உண்மை என்றால், உலகில் உள்ள அத்தனை பொருள்களும் கடவுள் தன்மை வாய்ந்தவையே. 

அது அவ்வாறாயின், கடவுளின் கூறான நம் உடம்பு, ஒரு துன்பம் வரும்போது கிடந்து துடிப்பது ஏன் கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவர்கள்கூட எழுப்பும் கேள்வியாகும்.

ஆன்மிக நெறியாளர் எவரும் இந்நாள்வரை இக்கேள்விக்குப் பதில் தந்ததில்லை.

இந்நிலையில் மீண்டும் ஒரு வினாவை, அவர்கள் முன் வைக்கிறோம். 

குயவன் தனக்குத் தேவையான துணைக் கருவிகளை அவரே உருவாக்கிக் கொள்ளவில்லை. அவற்றைப் படைத்தளித்தவர்கள் குயவனைப் போன்ற பிற மனிதர்களே.

ஆக, குயவர் பானையைப் படைக்கத் தொடங்குவதற்கு முன்னரே, துணைக் கருவிகளை உருவாக்கும் படைப்புத் தொழில் ஆரம்பம் ஆகிவிட்டது என்பது உண்மை.

இதைப் போலவே, கடவுள் படைப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, துணைக் கருவிகளைப் படைக்கும் தொழில் நடைபெற்றிருக்க வேண்டும் 

அந்தத் தொழில்களைச் செய்தவர்கள் படைப்புத் தொழிலில் கடவுளின் முன்னோடிகள் ஆவர்.

கடவுள் தானாகத் தோன்றியவர், அல்லது, இருந்துகொண்டே இருப்பவர் என்றால், இவர்களும் தாமாகத் தோன்றியவர்கள், அல்லது இருந்துகொண்டே இருப்பவர்கள் ஆவார்கள்.

ஆக, கடவுள் என்றொருவர் இருந்தால், அவர் ஒருவரே என்று சொல்வது அறிவுடைமை அல்ல.

அல்லவே அல்ல.

===============================================================