அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 26 செப்டம்பர், 2020

"தமிழில் பேசினால் ஸ்நானம் பண்ணனும்"... மஹா மஹா பெரியவா!!!

தமிழில் பேசினாலும், தமிழால் பிழைப்பு நடத்தினாலும்[குறிப்பாக, தினமலரும் காலைக்கதிரும்] மிகப் பெரும்பாலான பிராமணர்கள், சமஸ்கிருதத்தையும் இந்தியையும் ஆதரிக்கிறார்கள் என்பதும், இயன்றவரை தமிழுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதும் அப்பட்டமான உண்மைகள்.

மறைந்த, 'மஹா பெரியவா' என்று பிராமணர்களால் இன்றளவும் புகழ்ந்து போற்றப்படுகிற சந்திரசேகரேந்திரர் குறித்து, அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற நூலிலிருந்து…

'நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக்கொள்வது புரியாது.

“ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்பார்கள்.

அதற்கு, “உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்’ என்று பதில் சொல்வேன்.

சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்படுவார். காரணம், தமிழ் நீஷப்பாஷை. தமிழை நீஷப்பாஷையான பிராமணோத்தமர் பேசினால், அவர் நாக்கினை நீஷப்பாஷை தொட்டுவிட்டால், பிரம்மாவின் நெற்றியிலே பிறந்தவர் தீட்டுப்பட்டுவிட மாட்டாரா?'

தமிழைப் பற்றியும் தமிழர்களைப்பற்றியும் பிராமணர்களின் நிலை என்ன என்பது தெரிந்தவர்களுக்கு இது கண்டிப்பாக ஆச்சரியத்தைக் கொடுக்காது.

கோயில் கருவறைக்குள் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டாகிவிடும்; தமிழில் வழிபட்டாலும் தீட்டாகிவிடும் என்பதுதானே அவர்களின் நிலை.

இது தொடர்பான இன்னொரு நிகழ்வு.

ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார்[மறைவு: 1986] அவர்களை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது சைவப் பழமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்கள்! ஊராட்சி, நகராட்சி, நகரியம், ஒன்றியம் என்கிற அழகிய சொற்களைத் தமிழுக்குத் தந்த பெருமகன் அவர்.

அவர் பேட்டியிலிருந்து[சற்றே சுருக்கப்பட்டது].....

'சங்கராச்சாரியார் என்னைப் பார்க்கணும் என்று சொன்னாராம். நரசிம்மய்யர் என்பவர் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலே நிர்வாக அதிகாரியாக இருந்தார். அவர் என்னை வந்து அழைத்தார்.

நான் கால் சட்டை மேல் சட்டையோட இருந்தேன். இதோடு அவரை நான் எப்படி பார்க்க முடியும் என்று கேட்டேன். அதெல்லாம் வரலாம் என்றார். சதாரணமாக அவர்களைப் பார்க்கும் போது மேல் சட்டையோடு போக முடியாது.

வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் போனோம். 

அவர் பிரகாரத்தில் வந்துகொண்டிருந்தார். அப்பொழுது இந்த நரசிம்மய்யர் என்னைச் சீண்டுகிறார் …. நமஸ்காரம் பண்ணுங்க… நகமஸ்காரம் பண்ணுங்க விழுந்து கும்பிடுங்க என்று சொல்கிறார். நான் ஒன்றும் செய்யவில்லை.

பிரகாரத்தில் ஒரு பக்கத்தில் சுவர் ஓரமாக சங்கராச்சாரியார் நின்று கொண்டார். வலக்கைப் பக்கமாக நானும் நரசிம்மய்யரும் நின்று கொண்டோம். இடது கைப் பக்கம் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் நின்றார். இவர் ரேஷனிங்க் பற்றிக் கேள்வி கேட்கிறார். அதுவும் சமஸ்கிருதத்தில். அதை சமஸ்கிருத ஆசிரியர் தமிழில் சொல்கிறார் எனக்கு. தமிழிலே பதில் சொல்கிறேன் நான்.

பேச்சு முடிந்து வெளியே வந்தோம். வெளியே வரும் பொழுது அந்த நரசிம்ம அய்யரிடம், "என்ன அய்யா, அவர்தான் தமிழிலே சொன்னா தெரிஞ்சிக் கிறார். தமிழில் பேசவும் தெரியும். அப்புறம் எதுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர்?" என்றேன்.

"இதிலே பாருங்கோ…. பன்னிரெண்டரை மணிக்கெல்லாம் சந்திர மௌலீஸ்வரர் பூஜை இருக்கில்லையா, அதுவரைக்கிலும் எந்த நீசப் பாஷையிலும் பெரியவா பேச மாட்டார்" என்றார். எனக்கோ அறைந்துவிடலாமான்னு இருந்தது.

பெரியவாவின் தமிழ் மொழித் துவேஷத்துக்கான ஆதாரங்களில் இந்நிகழ்வுகளும் அடங்கும்!
===============================================================
ஆதாரம்: http://dvkperiyar.com/?p=25630