'அறிவியலின் உச்சத்தை நோக்கி உலகம் சென்றுகொண்டிருக்கின்ற இக்காலத்தில்கூட அப்பட்டமான மூடநம்பிக்கைகளை அறிவியல் என்றும், இன்றைய அறிவியலுக்கு அவைதான் அடிப்படை என்றும் காவிக் கும்பல் அலம்பல் பண்ணுது.
சென்ற நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பான “குளோனிங்’’ முறையில் உயிர்களை உருவாக்க முடியும் என்று நிரூபித்த அறிவியல், வேத காலத்திலேயே இருந்தது என்று பிரதமர் மோடி முதற்கொண்டு பலர் மேடைகளில் பரப்புரை செய்துவருவது தெரிந்ததே.
இதுக்கு என்னடா ஆதாரம் இருக்குன்னு கேட்டா, மகாபாரதக் கதைய ஆதாரமா காட்டுறாங்க.
மகாபாரதத்துல திருதராட்டிரன் மனைவி காந்தாரி ரெண்டு வருசம் கர்ப்பமா இருந்தும் குழந்தை பிறக்கலயாம். ஒரு அம்மிக்கல்லத் தூக்கி அவ வயித்துல அடிச்சிருக்கா. கரு கலைஞ்சி கீழே ஒழுகியிருக்கு. அதை எடுத்து 101 பானையில் போட்டுவைக்க, கௌரவர்கள் பிறந்தாங்களாம்.
இதில என்னடா அறிவியல் இருக்கு.?
ஒரு பொண்ணு கர்ப்பமாகிப் பத்துமாசம் ஆச்சினா குழந்தை பெத்தாகணும். இல்ல குழந்தையும் தாயும் செத்துரும். ரெண்டு வருசமா எப்படிக் கர்ப்பமா இருக்க முடியும்? கலைஞ்ச கருவ ஒரு குண்டாஞ்சட்டிக்குள்ள போட்டா எப்படிக் குழந்தை பிறக்கும்?
புராணக்கதை காலத்துலயே நம்ம ஆளுக பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்கானுகன்னு சொல்லி, அதுக்கு ஆதாரமா புள்ளையாரக் காட்டுறாங்க. புள்ளையார் பொறப்பப் பத்தி இந்துப் புராணத்தில ஒரே மாதிரி எழுதியிருக்கா? இல்ல. யானையைப் புணர்ந்ததால விநாயகன் பொறந்தாங்கிறது ஞானசம்பந்தர் வாக்கு. பார்வதி தேவி ஒரு 5 கிலோ அழுக்க அதோட உடம்புல இருந்து தெரட்டிப் புள்ளையார உருவாகியிருக்கிறதாவும் எழுதி வச்சிருக்கானுக..
அழுக்கைப் புள்ளயாக உருவாக்குறதுதான் உங்க அறிவியலா? சாணிய உருட்டிச் சாமின்னு கும்புடுறானுக. இதெல்லாம் அறிவியலா? தலைய வெட்டி இன்னொரு தலைய ஒட்டவைக்குறதான் உங்க பிளாஸ்டிக் சர்ஜரி அறிவியலா? பித்தலாட்டத்தனத்துலயும் ஒரு லாஜிக் வேணாமா மக்களே? மனுச மண்டைக்குப் பதில் எப்படி யானை மண்டைய ஒட்டவைக்க முடியும்? போட்டோசாப் பண்ணுனாலும் பொருந்தாதே.
ராமர் பாலம்னு புதுசா புரளியக் கிளப்பி விட்டுட்டு இருக்கானுக. எந்த ஒரு நவீன இயந்திரமும், ரோடு ரோலரும், கிட்டாச்சி வண்டியும், பொக்குலின் மிஷினும் இல்லாம அந்தக் காலத்துலயே தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் அமைத்திருக்கிறார்களாம். பாலம் கட்டுன கல்லுலகூட ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை அழியாமல் இருக்குதாம். இந்த மாதிரி பதிவுகள் வாட்ஸ்அப், பேஸ்புக்னு எப்போவும் சுத்திட்டுக் கெடக்கும். இதுல நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லைனு தலைப்பு வேற..
உங்க ஆபாசப் புராணத்துல அரக்கன், அசுரர்கள்னு குறிப்பிடுற ராவணன், சிங்கிலா வந்து சிதையத் தூக்கிட்டு போயிருக்கான். அதும் ஒரே நாளுல. கடவுள்னு கும்புடுற ராமனுக்கு அங்க போகப் பத்து வருசமா பாலத்த போடனுமாடா?
மாட்டு மூத்திரத்தில என்ன அறிவியல் இருக்கு? மாட்டு மூத்திரம் குடிச்சா உடம்புக்கு நல்லதுன்னு எந்த ஆஸ்பத்திரியில எழுதிப் போட்டுருக்கானுக? குடிக்கிறது மூத்தரம். இதச் சமாளிக்குறதுக்கு ஏண்டா அறிவியலப் புடிச்சி இழுக்குறீங்க?
அந்தக் காலத்திலேயே நாங்க கோள்களைக் கணிச்சிருக்கோம்னு இப்ப சொல்லிப் பீத்திட்டுத் திரியுறாங்க காவிக. இது யாருடா கண்டுபிடிச்சதுனு கேட்டா பதில் வராது. கோள்கள் ஒன்பது இல்ல, ஏழுதானு இப்ப அறிவியல் சொலிருச்சி. இன்னும் இவனுக பித்தலாட்டம் பண்ண அப்டேட் ஆகாம இருக்கானுக.
இப்பவரைக்கும் மனிதர்களின் தேவைகளுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாமே மேற்கத்திய நாடுகள்லதான் அதிகமா இருக்கு, இப்ப நாம பயன்படுத்துற பேஸ்புக் வரைக்கும்.
ஒரு எழவுக்கும் உதவாத மதத்தத் தூக்கிட்டு இந்து மதம்தான் உலக அறிவியலுக்கு அடிப்படைனு அடுத்தவங்க கண்டுபிடிச்ச ஊடக சாதனத்துலயே இவனுக பிரச்சாரம் பண்ணுறானுக.
டூவீலர், ப்போர்வீலர்னு மக்கள் பயன்பாட்டுக்குக் கண்டுபிடிச்சிக் கொடுத்தா, அந்த டூவீலர்க்குக் கோயிலுல அர்ச்சனை பண்ணிப் பூசையப் போடுறாங்க. ஏண்டா பூசைனு கேட்டா, விபத்து வராதாம். வெள்ளைக்காரன் ஒரு டூவீலர் வாங்குனா கிறுக்குத் தனமா ஐயருக்கு ஒரு 200, மாலைக்கு ஒரு 100, தேங்கா, பழம், சந்தனம், குங்குமம், பத்தி, சூடம் 150னு உங்களமாதிரி கிறுக்குதனமா பூசை போட்டுட்டாத் திரியுறான்?
உங்க முன்னோர்கள் முட்டாள்கள் இல்லனு சொல்லிட்டுத் திரியுற அறிவியல் என்னனு தெரியுனுமுனா காலையில ஐயர் வீட்டுப் பக்கம் போங்க. கோலத்தப் போட்டு, சென்டர்ல சாணியை உருட்டி வைச்சிருப்பாங்க. கேட்டா புள்ளையார்னு சொல்லுவாங்க.
இன்னும் ரெம்ப டீப்பா தெரியுனுமுனா. அதிகாலை வைணவக் கோவில்களுக்குப் போங்க. ஒரு பசு மாட்டப் பெருமாள் சிலைக்கு நேரா பெட்டக்ஸை திருப்பி நிக்க வைச்சிச் சாணிபோட விடுவாங்க. இது என்னனு கேட்டா, பெருமாள் மனைவி லட்சுமி வாசம் செய்யுற புனிதமான இடம் அதுன்னு சொல்லுவாங்க.
உண்மையில் சாணி, மூத்திரத்தைத் தவிர உங்க கண்டுபிடிப்புன்னு ஒன்னுமே இல்ல.'
===============================================================
நன்றி: பதிவர் முத்துக்குமார்