முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ஒளிவுமறைவில்லாமல் மனதில் பட்டதைப் பேசக்கூடியவர்.
"தமிழர்கள் சினிமா நட்சத்திரங்களைத் தெய்வமாகப் பாவித்து வழிபடுவது ஏன் என்பது புரியவில்லை. 1967-68ஆம் காலகட்டத்தில் நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தபோது தமிழ் நண்பர் ஒருவருடன் சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்தப் படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனின் கால்களைத்தான் காட்டினார்கள் (கால்கள் மட்டும்தான்). அதற்கே மக்கள் பயங்கரமாக ஆரவாரம் செய்தார்கள்" என்று ஒரு காலக்கட்டத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் சாடியிருக்கிறார் கட்ஜு.
கட்ஜு, பெரியாரையும் விட்டுவைக்கவில்லை. "ஆங்கிலேயர்கள் என்ன சொன்னாலும் அதற்கு ஒத்துப்போனவர் பெரியார்" என்று சொல்லியிருக்கிறார். 'ஆங்கிலேயர்கள் வெளியேறினால், பார்ப்பனர்கள் நம்மை ஆளுவார்கள்' என்று அவர் எச்சரிக்கை செய்ததை இப்படித் தவறாகத் திரித்துப் பரப்புரை செய்துவிட்டார்கள் என்பதைக் கட்ஜு அறிந்திருக்கவில்லை.
தமிழ்ச் சினிமாவில் சாதித்தது போல் தமிழக அரசியலிலும் சாதனை நிகழ்த்தும் பேராசையில், முன்னோட்டமாகச் சில அறிவிப்புகளைச் செய்திருக்கும் நடிகர் ரஜினியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் மார்க்கண்டேய கட்ஜு.
'தமிழர்களில் சிலர், ரஜிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் எனவும், முதல்வராக வேண்டும் எனவும் கூறிவருகின்றனர். ஆனால், ரஜினியிடம் என்ன இருக்கிறது? மக்களின் வறுமையைப் போக்கவும், வேலையில்லாத திண்டாட்டத்தைத் தீர்க்கவும், ஊட்டச்சத்துக் குறைபாடு, சுகாதாரப் பராமரிப்பு, விவசாயிகளின் கஷ்டம் போன்றவற்றைத் தீர்க்கவும் ஏதாவது தீர்வு ரஜினிகாந்த்திடம் இருக்கிறதா?அவரிடம் எதுவுமே இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அப்புறம் ஏன் மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள்?'' என்று பதிவிட்டிருக்கிறார் கட்ஜு. மேலும்.....
"அமிதாப் பச்சன் போல ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை" என்று மண்டையடியாய் ஓங்கி அடித்திருக்கிறார்.
அவர் twitterஇல் வெளியிட்ட பதிவு: