அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 8 பிப்ரவரி, 2021

திருப்பதி ஏழுமலையான் தெலுங்கர்களுக்கு மட்டுமே சொந்தமானவரா?!?!

#திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெலுங்கு பேசும் மாநிலங்களில் 500 கோவில்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேவஸ்தானச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்# -இது செய்தி[makkalkural.net/news/].

100% தெலுங்கு பேசும் மக்கள் வாழ்கிற மாநிலம் எதுவுமில்லை. பெரும்பான்மையினர் அம்மொழி பேசும் மாநிலங்கள் ஆந்திராவும் தெலங்கானாவும். 

செயல் அதிகாரி, மொழியைக் குறிப்பிடாமல் இவ்விரு மாநிலங்களில் 500 கோயில்கள் கட்டப்படும் என்று சொல்லியிருக்கலாம்.

தெலுங்கு பேசுவோர் சிறுபான்மையினராக வாழும் மாநிலங்கள் தமிழ்நாடு, கர்னாடகா, கேரளா போன்றவை. 

இவ்வகை மாநிலங்களில் 500 ஏழுமலையான் கோயில்கள் கட்டப்படும் என்றுகூடச் சொல்லியிருக்கலாம்.

இந்தியாவின் பல மாநிலங்களில் இவ்வெண்ணிக்கையில் கோயில்கள் கட்டப்படும் என்று சொல்லியிருப்பினும் தவறில்லை.

இவ்வாறெல்லாம் சொல்வதற்குப் பதிலாகத் தெலுங்கு பேசும் மாநிலங்களில் 500 கோ யில்கள் கட்டப்படும் என்று தெரிவித்திருக்கிறார் செயல் அதிகாரி. ஏழுமலையானுக்கு மிகப் பெரும் எண்ணிக்கையில் கோயில்கள் கட்டுவது ஏழுமலையானின் பக்தர்களுக்குப்[தெலுங்கு மட்டுமன்றிப் பல மொழி பேசுபவர்கள்] பேருவகை தரும் செய்தியாக இருக்கக்கூடும்.

எனவே, பல மொழி பேசும் மக்களுக்குச் சொந்தமான ஏழுமலையானுக்கு.....

பல மாநிலங்களில் 500 கோயில்கள் கட்டப்படும் என்று சொல்லாமல், தெலுங்கு பேசும் மாநிலங்களில் என்று தெரிவித்திருப்பது..... 

[திருப்பதி தேவஸ்தானச் செயல் அதிகாரியின் எண்ணப்படி], திருப்பதி ஏழுமையான் தெலுங்கு பேசும் தெலுங்கர்களுக்கு மட்டுமே சொந்தமானவரா என்று சந்தேகம் கொள்ளத் தூண்டுகிறது.

இங்கே, தமிழர்களில் ஒருசாரார் 'முருகன்' தமிழ்க் கடவுள் என்று சொல்லிக்கொண்டிருப்பதன் எதிர்வினையோ இது?

'கன்னடம் பேசும் மாநிலங்களில் '.....' கோயில்கள் கட்டப்படும்' என்னும் அறிவிப்பும், 'மலையாளம் பேசும் மாநிலங்களில் '.....' கோயில்கள் கட்டப்படும்' என்னும் அறிவிப்பும், இவை போன்ற மேலும் பல அறிவிப்புகளும் வெகு விரைவில் வரக்கூடுமோ?!

கூடும் எனின்.....

கற்பிக்கப்பட்ட கடவுள்களிலும் பாகப்பிரிவினையா என்று எள்ளி நகையாடத் தோன்றுகிறது.

=================================================================================