"என்னுடைய திடமான கணிப்பு என்னவென்றால் எதிர்காலத்தில் மக்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வார்கள் - ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அது இருக்காது'' என்றிப்படிச் சொல்பவர் The End of Sex And The Future of Human Reproduction என்னும் புத்தகத்தின் ஆசிரியர் ஹென்றி டி.கிரீலி//[https://www.bbc.com/tamil/global-48896045].
"இன்னும் 20 முதல் 40 ஆண்டுகளில் உலகெங்கும் பெரும்பாலான மக்கள்[மருத்துவ வசதி மிக்கவர்கள்], சோதனைச்சாலையில் கருத்தரித்துக் கொள்வதை விரும்புவார்கள்'' என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்தரித்தலுக்கு முந்தைய மரபியல் பரிசோதனைகள் (PGD) எதிர்கொள்ளும் சட்டபூர்வ மற்றும் நெறிசார்ந்த சவால்கள் இப்புத்தகத்தில் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. "பெரும்பாலான மற்ற விசயங்களைப் போல, ஓரளவுக்கு உள்ளுறுப்புகளில் எதிர்மறையான தாக்கம் ஆரம்பத்தில் இருக்கலாம். ஆனால் பி.ஜி.டி. மூலமாகப் பிறக்கும் குழந்தைகள், காலப்போக்கில், பாலியல் உறவு இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பவும் செய்வார்கள் என்றிவ்வாறு அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, சோதனைச்சாலைகளில் உருவாக்கப்பட்ட குழந்தைகளின் உலகில், பாலியல் உறவு மூலம் கருத்தரித்தலைச் சிறிய எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே விரும்புவார்களாம்.
ஆக,
'குழந்தை பெற்றுக் கொள்வதில் பாலியல் உறவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்ற நிலை உருவானால் - பாலியல் உறவு என்பதன் அர்த்தம், அதாவது, 'நோக்கம்' என்னவாக இருக்கும்?' -இது, எழுத்தாளர் பிரான்டன் அம்ப்ரோசினோ எழுப்பியிருக்கும் கேள்வி.
நம் பதில்,
'பாலுறவால் உருவாகும் இன்பத்தைப் பெறுவது மட்டுமே' என்பதாகத்தான் இருக்கும்.
நம் கேள்வி,
'உயிர்கள் அனைத்தும் உடலுறவு கொள்வதன் தலையாய நோக்கம் இனவிருத்திக்காக' என்னும் இயற்கை நெறியை, அல்லது, இறைவன் வகுத்ததாகச் சொல்லப்படும் விதியை மனிதர்கள் மாற்றியமைக்க முயல்வது மனித இனத்தை உயர்த்துமா, வீழ்த்துமா?!
======================================================================================