புதன், 19 மே, 2021

'காதல் போர்வை'யில் 'முதல்' கணினி நச்சுநிரல்[வைரஸ்]!!!


உலகின் முதல் மிகப்பெரிய கணினி 'நச்சு நிரல்'[VIRUS]ஐ உருவாக்கிய நபர், தாம் செய்த குற்றத்தை இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒப்புக் கொண்டுள்ளார். 'காதல் வைரஸ்' என்று அழைக்கப்பட்ட அந்த வைரஸ் கண்டங்களைத் தாண்டி உலகின் பல கணினிகளைத் தாக்கியது.

இப்போது 44 வயதாகும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 'ஒனெல் டி கஸ்மேன்' எனும் அந்த நபர், அந்தக் காதல் வைரஸைச் சர்வதேச அளவில் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கவில்லையாம; "பிறர் கணினிப் பாஸ்வேர்டைத் திருடி இணையத்தை இலவசமாகப் பயன்படுத்தவே அந்த வைரஸை உருவாக்கினேன்" என்கிறார்.

தாம் உருவாக்கிய வைரஸ் கண்டங்களைத் தாண்டிப் பல கணினிகளைத் தாக்கியதற்காகத் தாம் வருந்துவதாகக் கூறுகிறார். மே 4, 2000ஆம் ஆண்டு அந்த வைரஸ் பரவியது. 

//'உங்களுக்கான காதல் கடிதம் (LOVE-LETTER-FOR-YOU)' என்று மின்னஞ்சல் வரும். அதைக் கிளிக் செய்தால் அந்த வைரஸ் கணினியைத் தாக்கும்.// -இப்படியாக அந்த வைரஸ் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த வைரஸ் ஒரே நாளில் 4.5 கோடி கணினிகளைத் தாக்கியது.

வடிவமைத்த புண்ணியவான்['ஒனெல் டி கஸ்மேன்'].....