இச்செய்தி, இத்தாலியில் நடைபெற்ற 'கோல்ட்ஸ்மிடட்' கலந்தாய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலைப் பேராசிரியர் 'ஸ்டீவன் பென்னர்' என்பவர் அளித்துள்ளார்.
பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இது நிகழ்ந்திருத்தல்கூடும். பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே, சிகப்புக் கிரகமான செவ்வாய்[இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது]க் கிரகத்தில் உயிர்கள் சிறப்பாக வாழ்ந்திருத்தல் வேண்டும் என்கிறார் பேராசிரியர்.
ஆர்.என்.ஏ., டி.என்.ஏ., புரோட்டீன்கள் ஆகியவை உயிர் வாழ்வதற்கு அவசியமான முதல் மூன்று மூலக்கூறுகள் ஆகும். இதில் உயிர்கள் தோன்றுவதற்கு மிக முக்கியக் காரணமான ஆர்.என்.ஏ. வை உருவாக்குவதற்குத் தேவையான தாதுப்பொருட்கள் பூமியில் முற்காலத்தில் கடலில் கலந்திருந்தாலும், பூமியைவிடவும் செவ்வாய்க் கிரகத்தில்தான் அதிக அளவில் நிறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.