"நன்றாக 'முகமழிப்பு'ச் செய்து அதை மொழுமொழுவென்று வைத்திருக்கும் ஆண்களைவிடத் தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவதாகக் 'குயின்ஸ்லாந்து'ப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது[நன்மை 02]."
"முகத்தை(கன்னம், தாடை, கழு த்து) வெப்பம் மிகுந்த சூரியக் கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது[நன்மை 03]."
"வயது அதிகரிக்கும்போது முகத்தில் சுருக்கங்கள் விழும். அப்படி விழும் சுருக்கத்தை மறைப்பதற்குத் தாடி உதவுகிறது. அதனால் முகம் இளமையாகவும், சுருக்கம் இல்லாமலும் காட்சி அளிக்கும்[நன்மை 04]."
"'டேட்டிங்’ இணையதளம் நடத்திய ஆய்வு ஒன்றில், தாடி வளர்ப்பவர்களைக் கவர்ச்சிகரமான நபர்களாக 60% பெண்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் தாடி, மீசையுடன் கூடிய ஆண்களைத் தங்களின் சிறந்த பார்ட்னராகத் தேர்வு செய்தார்கள்[நன்மை 05]."
"நம்மைத் தாக்கும் பாக்டீரியாக்கள் சில நேரங்களில் முடி வேர்களில்கூட தங்கள் குடியிருப்பை உருவாக்குகின்றன. இது தோலில் கரும்புள்ளிகள் இருப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது. முகத்தில் தாடி வளர்த்தால், பாக்டீரியாக்களை அது அழித்து விடுகிறது"[நன்மை 06].
***இப்படியெல்லாம், அந்த ஆய்வு சொல்லுது, இந்த ஆய்வு சொல்லுதுன்னு ஆளாளுக்கு அடிச்சிவிட்டுடறாங்க. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
நீங்களெல்லாம் எப்படியோ, நான் நம்பினதே இல்லைங்க. இத்தனை ஆண்டுகளாக இல்லாம இப்போ தாடி வளர்க்க ஆரம்பிச்சிருக்கேன். 'பிரதமர் மோடிஜி' அளவுக்கு அது வளர்ந்த பிறகு இதெல்லாம் உண்மையா, இல்லையான்னு[குறிப்பாக நன்மை: 02] ஒரு பதிவு போடுறேன். தவறாம படிங்க!
'குயின்ஸ்லாந்து' பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்விலும், ஆண்களின் கவர்ச்சியைப் பற்றி 8,000க்கும் மேற்பட்ட பெண்களிடம் கேட்டபோது, முழுத் தாடி வளர்க்கும் ஆண்களே அதிகக் கவர்ச்சியாக இருப்பதாக அவர்கள் சொன்னார்களாம்.
***நம் ஊரில் கருத்துக் கணிப்பு நடத்தினால் வெறும் 08 பெண்கள்கூடக் கருத்துச் சொல்ல மாட்டார்கள்; எல்லாம் பயந்தாங்கொள்ளிகள்!
***எது எப்படியோ, நான் 'தாடி' வளர்க்க ஆரம்பிச்சுட்டேன். இந்நாள்வரை தாடி வளர்க்காம இருந்தால் நீங்களும் ஆரம்பிக்கலாமே!
====================================================================================
உதவி: https://zeenews.india.com/tamil, - tamil.samayam.com