பக்தர் ஒருவரின் கேள்வியும், அதற்கான ஜக்கி வாசுதேவ் பதிலுரையின் தொடக்கமும், அதற்கான 'கருத்துரை'களும் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
#தலைப்பு:
'ஆன்மீகப் பாதையில் உணவு, தூக்கம், உடலுறவு தவிர்க்கப்பட வேண்டியதா?'
[செப் 03, 2020 09:48 |] கருத்துகள் (11)
கேள்வி: சத்குரு, நான் ஆன்மீகப் பாதையில் இருக்கிறேன். இப்பாதையில் இருந்துகொண்டே, உணவு, தூக்கம், உடலுறவு போன்ற என் உடற்தேவைகளை, ஆசைகளை நான் நிறைவேற்றிக் கொள்ளலாமா?
ஜக்கி[சத்குரு]: //நீங்கள் குறிப்பிட்ட மற்றொரு ஆசை, அதாவது உடலுறவைப் பற்றிப் பார்க்கலாம்.
உடலுறவு என்பதை உண்மை நிலையில் இருந்து அலசிப் பார்ப்போம். உங்கள் ஆசை உடலுறவு கொள்வது பற்றியதல்ல. இதில் முதல் விஷயம், உங்கள் ஹார்மோன்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை அடக்கியாள்வது. இரண்டாவது விஷயம், உடலுறவில் இருக்கும் இன்பம். மூன்றாவது விஷயம், உடலுறவின் மூலம், யாரோ ஒருவரோடு, ஒன்றிவிடும் உங்கள் முயற்சி. ஆனால் நீங்கள் எப்படி முயன்றாலும் உடலுறவு இவ்வகையில் வேலை செய்வதில்லை[?].....//
இவ்வாறான விளக்கம் தொடர்கிறது. விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியில் வாசிக்கலாம். வாசிக்காமலே, தொடர்ந்துவரும் 'கருத்துரை'களின் மூலமே பதிலின் தரத்தை அறிந்துகொள்ளலாம்[பிழைகள் திருத்தப்படவில்லை].
* * *
வாசகர் கருத்து (11) [10 மட்டுமே இடம்பெற்றுள்ளது]
1. Ocean - Kadappa,இந்தியா
08-செப்-202016:11:43 IST Report Abuse
இவரது கட்டுரையின் கருத்துக்கும் தலைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. வழ வழா கொழ கொழா.
2. திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா10-செப்-202009:52:48 IST Report Abuse
புரிவதற்கான பக்குவம் வரட்டும்...
3. Malick Raja - Jeddah,சவுதி அரேபியா
06-செப்-202013:59:12 IST Report Abuse
தினமலர் உண்மையான ..துணிச்சலான ஊடகம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவாய்ப்பில்லை .. அப்படியே இவருடைய வாழ்க்கை வரலாறையும் வெளியிட்டால் தினமலருக்கு மேலும் சிறப்பாக இருக்கும்.
4. 07.Girija - Chennai,இந்தியா
06-செப்-202005:46:06 IST Report Abuse
மோடி மஸ்தான் கீறி பாம்பு சண்டை விடப்போறேன் என்று இழுப்பது போல் பொம்மை மொம்மை என்று இழுவை பதில். ஒன்றும் புரியவில்லை. கமல்ஹாசனின் பேச்சு போல் ஒரே குழப்பம். தெளிவான பதிலை நான் சொல்கிறேன் , பிறன் மனை நோக்காமல், அபகரிக்காமல், மனைவியுடன் இல்லறத்தில் இருந்து இறை பணியாற்றுவதே சிறப்பு . புராணங்களில் வரும் அடியார்கள் கதைகளில் அவர்கள் மனைவியுடன் இறை பணியாற்றும்போதே இறைவன் அவர்கள் முன் தோன்றி அருளினார். விரதம் புண்ணிய தினங்கள் போன்ற நாட்கள் ஆடி மாதம் போன்ற காலங்களை தவிர்த்து , இறைவழிபாடுகள் செய்து இல்லறத்தில் இருப்பதே உண்மையான ஆன்மிகம். உங்கள் குழந்தைகள் உங்களை பார்த்து தான் வளர்கின்றனர், பாசம் நேசம் பக்தி என்பதை நீங்கள் எவ்வளவு சொன்னாலும், கண்ணால் பார்ப்பதைத்தான் குழந்தைகள் பின்பற்றுவர். அதனால் மனதில் கள்ளம் இல்லை என்றால் இது போன்ற சந்தேகங்கள் வராது.
5. PR Makudeswaran - Madras,இந்தியா
05-செப்-202010:56:23 IST Report Abuse
எல்லாம் உண்மைதான். ஊருக்கு உபதேசம் தானே நம்மை , நாம் செய்தவற்றை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தால் இது எல்லாம் சொல்லத் தோன்றுமா என்பது புரியவில்லையே.
6. Nimalakumar Balasingam - Middelfart,டென்மார்க்
04-செப்-202023:23:20 IST Report Abuse
சிறந்த விளக்கம்
7. Girija - Chennai,இந்தியா06-செப்-202005:22:11 IST Report Abuse
உங்களுக்கு புரிஞ்சுடுச்சா ? நீங்க ரெண்டுபேரும் தான் ஆன்மீகவாதிகள்....
8. Murthy - Bangalore,இந்தியா
04-செப்-202018:25:22 IST Report Abuse
எப்படி நிலத்தையம் மலையையும் ஆட்டையப்போடுவது என்று விளக்குங்கள்?
9. Lion Drsekar - Chennai ,இந்தியா
04-செப்-202017:20:33 IST Report Abuse
மன்னிக்கவும் புனித நாட்களில்கூட காலில் செருப்பு அணிந்து மருமகன் பாடலுக்கு நாட்டியம் நாம் ஆட முடியுமா? காலத்தின் கோலம், சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்கள், எந்த தவறு செய்தாலும் கூட்டம் சேர்ந்துவிட்டால் எல்லாமே புனிதமாகிறது, வந்தே மாதரம்.
10. Sampath Kumar - Chennai,இந்தியா
தவிர்த்தால்தான் ஆன்மிகம் இல்லாட்டி லவுகீகம் இல்லையா சாமி
***இந்தப் போலி ஆன்மிகவாதியின், கொஞ்சமும் புரியாத ஆன்மிக உரைகள் குறித்து, 18 பதிவுகள் எழுதியுள்ளேன். இன்னும் நிறையவே எழுதலாம். வாசிப்போர் விரும்புவார்களா, மனம் சலிப்பார்களா என்பதைக் கணிக்க இயலாததால் அதைத் தவிர்த்தேன்.
மேற்காணும் கருத்துரைகளை இங்குப் பதிவு செய்ததன் நோக்கம், 'புரியாத வகையில் எதையெதையோ இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்' என்று நான் வலியுறுத்திவருவதை, வாசகரும் உறுதிப்படுத்துகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே.
இப்படி, புரியாதனவற்றையே எழுதி எழுதி உலக அளவில் இவரால் எப்படிப் பிரபலம் ஆக முடிந்தது என்பது பற்றிச் சிந்தித்தால் சரியான விடை ஏதும் கிடைத்திடவில்லை.
மிஞ்சுபவை.....
"இவரென்ன மந்திரவாதியா? மாயாஜாலம் புரிபவரா?" என்னும் கேள்விகள் மட்டுமே!
==============================================================================