1975இல் இலங்கை வானொலி மூலம் மிகவும் பிரபலமடைந்தது என்கிறார்கள், 'சுராங்கனி... சுராங்கனி...' என்னும் 'பாப்' பாடல்; நான் கேட்டதில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு, தற்செயலாக 'youtube'இல் கண்டும் கேட்டும் ரசித்து மகிழ்ந்தேன்.
மகிழ்ந்தேன் என்பதைவிடவும் 'மயங்கினேன்' என்பதே சரி.
4 நாட்களில் பல முறை ரசித்த பிறகும் மயக்கத்திலிருந்து விடுபடவில்லை.
இந்த அளவுக்கு என்னைக் கிறங்கடித்துத் தொடர் மயக்கத்தில் ஆழ்த்தியது, மலேசிய வாசுதேவனுடன் இணைந்து பாடிய 'ரேணுகா' என்பவரின் காந்தக் குரலா, பின்னணி இசையின் முற்றிலும் மாறுபட்ட ரிதமா, சிரிப்பூட்டும் பாடலின் உள்ளடக்கமா, கிளுகிளுப்பூட்டும் கவர்ச்சிப் புன்னகையுடன் வளைந்தும் நெளிந்தும் குனிந்தும் நிமிர்ந்தும் சுழன்றும் நளின நடனம் புரியும் அந்த அழகுப் பெண்ணா என்று பல முறை எனக்கு நானே கேள்விகள் கேட்டதில் விடையும் கிடைத்தது.
'இவை எல்லாமும்தான்' என்பதே அது.
கீழ்வரும் அந்தக் 'காணொலி' உங்களை வெறுமனே மகிழ்விக்குமா, மயக்கவும் செய்யுமா என்பது எனக்குத் தெரியாது. உங்களுக்காகப் பகிர்ந்திருக்கிறேன்[பாடல் குறித்த மற்ற விவரங்கள் காணொலியில்]:
==========================================================================
அமேசான் கிண்டிலில் என் புதிய நூல்[36]:
நரகவாசல்!!!: [விழிப்புணர்வுக் கட்டுரைகளும் கதைகளும்] (Tamil Edition)
Tamil Edition | by 'பசி'பரமசிவம் | 23 October 2021