வரவிருக்கும் ஒரு 'நாள்'ஐ நல்ல நாளா என்று அறிந்துகொள்ளவதற்குப் 'பஞ்சாங்கம்' பார்ப்பார்கள்; சோதிடரை அணுகுவார்கள். என்னைப் பொருத்தவரை, அந்த நாளில் நல்லது நடந்தால் மட்டுமே அதை நல்ல நாளாகக் கருதுவது வழக்கம்.
'நேற்று முன்தினம்'[05.01.2022] என்பது என் வாழ்க்கையில் நல்லது நடந்த நாட்களில் ஒன்றாகும். வழக்கம்போல அதையும் என் நாட்குறிப்பில் குறித்துவைத்தேன்[இது எப்படியிருக்கு?!].
அந்த நல்லது.....
அமேசான் 'கிண்டெல்'[கிண்டில்?]இல் புதிதாக ஒரு நூல்[37ஆவது] வெளியாகியிருப்பது!
நூலின் தலைப்பு: 'அவள் விலைமகள்தான்! ஆனாலும்.....'
படித்துமுடித்த பிறகும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் 03 கதைகள் & 08 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
அனைத்துப் படைப்புகளுமே மீண்டும் ஒருமுறையேனும் வாசிக்கத் தூண்டுகிற தொய்வில்லாத நடையில் எழுதப்பட்டவை.
வாய்ப்பமைந்தால், ஒரே ஒருமுறையேனும் வாசித்துப் பாருங்கள்.
பிடித்திருந்தால், அன்பர்களுக்கும் 'அன்பி'களுக்கும் பரிந்துரை செய்யலாமே!
நன்றி.