பதில்:
1.'மத்தேயு' எத்தியோப்பியா நகரத்தில் ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தார்.
2.'மாற்கு' அலக்சாந்திரியாப் பட்டணத்தில் தெருவீதியில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்தார்.
3.'லூக்கா' கிரேக்க நாட்டில் தூக்கிலிடப்பட்டு மரணமடைந்தார்.
4.'யோவான்' இரும்புச் சட்டியில் கொதித்துக்கொண்டிருக்கும் எண்ணையில் போடப்பட்டும் சாகாததால், 'பத்மு' என்னும் தீவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு மரணத்தைத் தழுவினார்.
5. 'பெரிய யோதாபு' எருசலேம் நகரில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
6.'சின்ன யாகோபு' ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து தள்ளியும் இறக்காததால் தடியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
7.'பேதுரு' சிலுவையில் தலைகீழாக அறைந்து கொல்லப்பட்டார்.
8.'பற்தலோமேபு' உயிருடன் இருக்கும்போதே தோல் உரிக்கப்பட்டு இறந்தார்.
9.'அந்திரேயா'வை, [சிலுவையில் கட்டப்பட்ட நிலையில்] நிறுத்தாமல் பரப்புரை செய்ய வைத்ததால் உரையாற்றிக்கொண்டே உயிரிழந்தார்.
10.'தோமா' என்னும் 'தோமஸ்' ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்.
11.'யூதா' அம்புகள் எய்யப்பட்டுச் சாவைத் தழுவினார்.
12.'பர்னபா', 'சலோனிக்கே' என்னும் நகரத்தில் யூதர்களால் கல்லெறிந்து கொல்லப்பட்டார்.
13.'பவுல்', 'நீரோ' என்னும் ரோமப் பேரரசனால் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
* * *
***கடவுளை வம்புக்கிழுக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். காண்போரைக்கூட அல்ல, கேட்போரையே கதிகலங்க வைக்கும் கொடூரக் கொலைகளைச் செய்த யூதர்களுக்கு இப்படியான குரூரப் புத்தியைக் கொடுத்தவர் அனைத்தையும் படைத்தவர் என்று கருதப்படும் கடவுள்தானே?!
"இல்லை" என்றால், இது அவர்களுக்கு வாய்த்தது எப்படி?
"இயற்கையாய் அமைந்தது" எனின், கடவுள் என்று ஒருவர் எதற்கு?!
==========================================================================நன்றி: 'தாமரை1999 மாத இதழ்'