அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 12 பிப்ரவரி, 2022

ஒரு நாள் மட்டும் 'ஜீவசமாதி'ஆகி மீண்டுவருவாரா ஜக்கி?!?!

மேற்கண்டதுதான் அகில உலகின் இன்றைய 'ஆகச் சிறந்த' கேள்வியாகும்.

பதிவைப் படியுங்கள்.

கிழே இடம்பெற்றுள்ள காணொலி வெளியாகி ஓராண்டு கழிந்திருக்கிறது. இதில்,  விஜயகுமாரி
என்னும் 'விஜி' ஜீவசமாதி(மஹாசமாதி) அடைந்த நிகழ்வு ஜக்கி வாசுதேவால் விலாவாரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

'ஜீவசமாதி(மஹாசமாதி) என்றால் ஜீவனைச் சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம். சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள்படும்...[https://www.aanmeegamalar.com/view-article/] என்றிப்படி, 'ஜீவசமாதி'க்கு விளக்கங்கள் தரப்படுகின்றன.

'உடம்புக்குள் ஜீவன் என்று ஒன்று இருக்கிறது; சமாதிக்குள் இடம்பெற்ற உடம்பு மண்ணோடு மண் ஆகிவிட, ஜீவன் மட்டும் சமாதியில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும்.....(தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு[15&16?] முன்பு வாழ்ந்த  பதினெட்டுச் சித்தர்கள் உயிரோடு சமாதி ஆனார்கள். அவர்களின் உயிர்கள்(ஜீவன்கள்) இன்றளவும் அவர்களின் சமாதிகளிலேயே இடங்கொண்டுள்ளன என்று சொல்லப்படுவதை நினைவுகூர்க) என்று சொல்வதெல்லாம் பழங்கதை.
 

குழிக்குள் அமர்ந்து, பட்டினி கிடந்து மூச்சுத் திணறிச் சாகலாமே தவிர, மூச்சை அடக்கித் தியானத்தில் மூழ்கி ஒருவர் சமாதி ஆனார் என்பதற்கோ, அப்படிச் சமாதி அடைந்தவரின் உயிர்[ஜீவன்] சமாதியிலேயே தங்கியிருக்கும் என்பதற்கோ எந்தவித அறிவியல் அடிப்படையிலான ஆதாரமும் இல்லை[உடம்புக்குள் ஜீவன் என்று ஒன்று இருப்பதே உறுதி செய்யப்படவில்லை. மூளைதான் எல்லாம் என்கிறது அறிவியல்].

உயிர் தங்கியிருப்பதாக நினைத்து அதை வழிபடுவதெல்லாம் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில்தான்.

கீழே இடம்பெற்றுள்ள காணொலியில், ஜக்கி வாசுதேவ், அவரின் மனைவி 'விஜி' ஜீவசமாதி(மஹாசமாதி) அடைந்ததைப் பற்றி விவரித்துள்ளார். ஒரு வகையில், அந்த அம்மையாரின் மரணம் குறித்த ஜக்கியின் வாக்குமூலம் என்றுகூட இதைச் சொல்லலாம்.

யோகா, சுவாசப் பயிற்சி என்று ஏதோ ஒரு வழிமுறையைக் கையாண்டு, உயிருடன் ஒருவர் ஜீவசமாதி ஆவது அறிவியல் அடிப்படையில் சாத்தியமே இல்லை. இது குறித்த மிகத் தெளிவான விளக்கத்தை எவரும் தந்ததும் இல்லை.

ஆக, விஜி ஜீவசமாதியானது உண்மையல்ல என்னும்போது அவர் உயிரிழந்தது எவ்வாறு?

தன் மனைவி ஜீவசமாதி ஆனது உண்மையே என்று ஜக்கி சாதிப்பாரேயானால்.....

ஜீவசமாதி ஆவதென்பது உண்மை என்று நிரூபிக்க, ஒரே ஒரு நாள் மட்டும் மூடப்படவிருக்கும் ஒரு குழிக்குள் மூச்சை அடக்கி இருந்து உயிருடன்  வெளிப்படுவாரா?

***ஜக்கியைப் போல் பிரபலம் அல்லாத வேறு யாரேனும் ஒருவர், சர்ச்சைக்குரிய விதத்தில் அவரின் மனைவி இறந்துவிட, "என் மனைவி ஜீவசமாதி அடைந்தார்" என்று சொன்னால், அவருடைய சொந்தபந்தங்களோ, அண்டை அயலவரோ நம்புவார்களா?***

விஜியின் மரணம் குறித்து வழக்கு நடந்ததாக எல்லாம் சொல்லப்படுகிறது. அது அல்ல இங்கு பிரச்சினை. அவராகவே 'என் மனைவி ஜீவசமாதி அடைந்தார்' என்று காணொலியில் வாக்குமூலம் அளித்திருப்பதுதான் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

கவனிக்க வேண்டியவர்கள் இதைக் கவனித்தார்களா? ஜக்கி சொல்வதையெல்லாம் அவர்கள் நம்பினார்களா? இப்போதும் நம்புகிறார்களா? 

'யாமறியோம் பராபரமே'!


'பாலிமர்' தொலைக்காட்சிக்கு ஜக்கி வாசுதேவ் அளித்த பேட்டிக்கான பழைய காணொலி கீழே. அவரைப் புரிந்துகொள்வதற்கு இதுவும் உதவக்கூடும்.