அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 5 பிப்ரவரி, 2022

ஆடைக்குள் சிக்கி மூச்சுத் திணறும் ஆறறிவு!!!

யற்கையிலேயே பெண்களின் உடலமைப்பு கவர்ச்சி மிக்கதாக உள்ளது.

'பெண்களின் நிறம், அழகு, இளமை, உறுப்புகளின் திரட்சி ஆகியவை ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. ரசிப்பதோடு நிற்காமல் அவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதும் அவ்வப்போது நிகழ்கிறது.

எனவே, இயன்றவரை கவர்ச்சி காட்டாமல் உடை அணிவது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நன்மை பயப்பதாகும்.

இந்தவொரு நோக்கத்துடன்தான் இஸ்லாமியப் பெண்கள் 'ஹிஜாப்'[பர்தா] அணிவது வழக்கப்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார்கள்[இந்தப் பர்தா முறை மாற்று மதத்தவர்களால் விவாதத்திற்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவாதம் இங்கு தேவையற்றது].

இந்தப் பர்தா எனப்படும் 'ஹிஜாப்' ஆடையுடன் முஸ்லீம் மதம் சார்ந்த மாணவிகள் வகுப்புக்குச் சென்றது பெங்களூருவில் ஒரு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பெங்களூரு உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குச் சென்றுவந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக, கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய இடங்களில் உள்ள அரசு பி.யூ. கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள் நேற்று ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாப் போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸாரும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

"சரஸ்வதி தேவி யாருக்கும் வேறுபாடு காட்டுவதில்லை" என்று ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, “மாணவர்கள் கல்லூரிக்கு வருவது வழிபாடு நடத்த அல்ல. மத அடையாளங்களை வழிபாட்டுத் தலங்களுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஹிஜாப், காவித் துண்டு ஆகியவற்றைக் கல்லூரிக்குள் அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒன்றுபட்ட மனோநிலைக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் பாரதமாதாவின் பிள்ளைகள் என்பதை உணர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்https://www.hindutamil.in/news/india/764421-hijab-saffron-controversy-in-karnataka.html.

ஆக, இந்த ஆடை விசயத்தில் இருவேறுபட்ட கருத்துகள் நிலவுகிற நிலையில் நாம் சொல்ல விரும்புவது.....

முஸ்லீம் பெண்கள் ஹிஜாப்பில் வருவதால் மற்ற இந்து மாணவிகளும் ஹிஜாப்பால் ஈர்க்கப்பட்டு, அவர்களும் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்து செல்ல வாய்ப்பிருக்கிறதா? இதற்கென்று ஒருவிதக் கவர்ச்சி இருக்கிறது. இந்தக் கவர்ச்சி, பிற மாணவிகளை இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்துவிடும் என்று அஞ்சுவதற்கு இடமுள்ளதா?

நிச்சயமாக இல்லை.

வீட்டிலிருந்து வெளியே கிளம்பினாலே 'பர்தா'[ஹிஜாப்] அணிவது அவர்களின் வழக்கம் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று என்பதால், இதற்கு இந்து மாணவிகள் எதிர்வினை ஆற்றமாட்டார்கள் என்பது உறுதி.

இதைப் போலவே, காவித் துண்டு போட்ட இந்து மாணவர்களைப் பார்த்து, மிச்சமுள்ள மாணவர்களும் காவித் துண்டு போட்டு வகுப்புகளுக்கு வருவார்களா? காவி 'வேட்டி சட்டை'யுடன் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறதா?

இருப்பதாக வைத்துக்கொண்டாலும், அதனால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது?

எதுவுமில்லை.

சுயமாகச் சிந்திக்கும் பருவத்தினர் இவர்கள் என்பதால், ஆடை விசயத்தில் மாணவ மாணவியருக்கு முழுச் சுதந்திரம் அளிக்கலாம்.

கல்லூரி முழுக்கக் கறுப்பும் காவியுமாக மாணாக்கர்கள் நடமாடுவது கண்களை உறுத்தும் என்று எவரும் கவலைப்பட வேண்டியதில்லை. எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்.

ஆனால், இந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, அரைநிர்வாணமாகவும் முக்கால் நிர்வாணமாகவும் வகுப்புகளுக்கு வருகைபுரிந்து, "இப்படி வருவதும், வேறு எப்படியும் வருவதும் எங்களின் பிறப்புரிமை" என்று கூட்டம் கூடி இவர்கள் கொடி பிடித்துவிடக் கூடாது என்பதே நம் கவலை!

ஹி... ஹி... ஹி!!!

==========================================================================