பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

கேட்காத கேள்வியும் சொல்லாத பதிலும்!!![100% கற்பனை&நகைச்சுவை]

கைவசம் உருப்படியான 'சரக்கு' எதுவும் இல்லாத நிலையில், "எதையாவது எழுது... எழுது... எழுது" என்னும் உள்மன உந்துதலின் விளைவு, கீழ்க்காணும் 'கேள்வி-பதில்' பதிவு. 

கேள்வி: உலகம் எப்படித் தோன்றியது?
பதில்: தெரியாது.

கே: கடவுள் படைச்சார்னு சொல்றாங்களே?
ப: சொல்லுறவங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, எனக்குத் தெரியவே தெரியாது.

கே: அவங்களைச் சொல்ல வைத்தது யார்?
ப: தெரியாது.

கே: நீங்க எப்படித் தோன்றினீங்க?
ப: எனக்குத் தெரியாது. என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும்தான் தெரியும். ஹி... ஹி...ஹி!!!

கே: அவங்க எப்படித் தோன்றினாங்க?
ப: அது அவங்களுக்கும் தெரியாது. அசிங்கமா எல்லாம் கேட்க வேண்டாம். வேறே கேள்வி கேளுங்க.

கே: நான் கேட்க, நீங்க தெரியாதுன்னு சொல்ல... இப்படி நம்மை உரையாடத் தூண்டியது யாரு?
ப: எனக்குத் தெரியாது

கே: நீங்க எப்போ மரணம் எய்துவீங்க?
ப: தெரியாது.

கே:செத்ததுக்கு அப்புறம் என்ன ஆவீங்க?
ப: தெரியாது.

கே: உலகம் அழியுமா? அழியும்னா எப்போது? எப்படி அழியும்?
ப: தெரியாது... தெரியாது... தெரியாது.

கே: எப்பவும் அழியாம இருந்துட்டே இருக்குமா?
தெரியாது.

கே: பாவம் புண்ணியம்னு சொல்றாங்களே, அதுகள்ல உண்மை இருக்கா?
ப: தெரியாதய்யா தெரியாது.

கே: எந்தவொரு கேள்விக்கும் பதில் தெரியலையே உங்களுக்கு. பாவம் நீங்க. உங்களை இப்படியொரு அறிவுச்சூன்யமா கடவுள் ஏன் படைச்சாரு?
ப: எனக்கெப்படித் தெரியும்? நீங்க படைப்பாளின்னு சொல்லுற அவரைத்தான் கேட்கணும்.

கே: கேட்ட அத்தனைக் கேள்விக்கும் தெரியாது... தெரியாதுன்னு மட்டும் சொல்லத் தெரியுதே, அது எப்படி?
ப: இப்படி, எனக்கு மட்டுமல்ல, யாருக்குமே பதில் தெரியாத கேள்விகளை நீங்க கேட்டுகிட்டே இருந்தா நானும் தெரியாது தெரியாதுன்னுதான் சொல்லிட்டிருப்பேன். எனக்கு நிறையவே வேலை இருக்கு. உங்களுக்கு எந்த வேலையும் இல்லேன்னா, உலகத்துல பல்லாயிரக் கணக்கில் சாமிகள் இருக்கு. அதுல ஒன்னை நினைச்சித் தியானம் பண்ணுங்க; ஜெபம் கிபம்னு பண்ணினாலும் சரியே.
                                       *   *   *   *   *
***வருகை புரிந்து வாசித்தவர்களிடம் ஒரு கேள்வி:

"மேற்கண்ட இந்த இரண்டு பேர் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?"ன்னு கேட்டா, உங்களின் பதில் என்னவாகவும் இருக்கலாம். சாமானியனான 'பசி'பரமசிவம் பதில்.....

"கேள்வி கேட்டவன் அறிஞன். பதில் சொன்னவன் ஞானி."

"எவன் தெரியாது என்னும் உண்மையை மனம் திறந்து ஒப்புக்கொள்கிறானோ அவனே ஞானியாவான்" என்பது அறிஞர்களின் வாக்கு!

நீங்கள்: "ஒரு முட்டாளும் இந்த மாதிரி எதைக் கேட்டாலும் தெரியாதுன்னுதானே சொல்லுவான்?"

நான்: அது வந்து... வந்து... ஹி...ஹி...ஹி!!!
==========================================================================