'ஆண்களின் 'விந்து'வில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது' என்பது நாம் ஏற்கனவே அறிந்த செய்தி. அது எந்த அளவிற்கு என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.
இது குறித்துச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆண்கள் 30 வயதை எட்டிய பிறகு, அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் அவர்களிடம் ஒரு சதவிகித ஆண்மை[பாலுறவுக்கானது] குறைவதாகவும், சில ஆண்களில் இந்த ஆண்மைக் குறைவு 35 வயதிற்குமேல் தொடங்குவ தாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.
விந்தணுக்களை[Sperm]ப் பெண்ணின் கருப்பையை நோக்கிச் சுமந்து செல்லும் விந்துத் திரவம்[Seminal fluid... அதாவது, உறவை எளிதாக்கும் 'காமநீர்'] சுரப்பதும் ஆண்டுதோறும் குறைந்துவருகிறது என்பது கூடுதல் செய்தி.
விந்துத் திரவம் மட்டுமல்ல, ஆண் குழந்தை உற்பத்திக்குக் காரணமான, ஆணின் 'y'[பெண்ணின் x குரோமோசோமும், ஆணின் y குரோமோசோமும் இணைந்தால்தான் ஆண் குழந்தை உருவாகும்] குரோமோசோம்[Chromosome] எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறதாம்.
காலப்போக்கில் 'y' யின் உற்பத்தி அடியோடு நின்றுவிடும் ஆபத்தும் உள்ளது என்கிறார்கள்.
இது, காலங்காலமாகப் பெண்ணை அடிமைப்படுத்திவரும் ஆண் வர்க்கத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவலாகும்.
ஆண்கள் பாவம்!
==========================================================================