ஞாயிறு, 15 மே, 2022

'புடின்' ரத்தக் குளியலும் 'உக்ரைன்' போர் நிறுத்தமும்!!

விளாடிமிர் புடினுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிவரும் நிலையில், அது என்ன வகையான புற்றுநோய் என்பது குறித்தும் தெரியவந்துள்ளதாக https://news.lankasri.com தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் முன்றாவது மாதத்தைத் தொட்டிருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் உடல்நிலையில் கோளாறு இருப்பதை அவரின் சமீபத்திய வெளித் தோற்றங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

தகவலின்படி, புடின் வயிற்றுப் புற்றுநோய், 'நடுக்கவாத நோய்'[பார்கின்சன்] ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது[18 மாதங்களுக்கு முன்னரே அவருக்கு இந்த நோய்கள் தொற்றியிருக்கின்றன].

சமீபத்தில் மட்டும் 35 முறை புற்றுநோய் மருத்துவரிடம் சென்று அவர் பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார். மான் கொம்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரத்தத்தில் புடின் குளிப்பதாகக் கூறப்படுகிறது.

இது ஒருவகையான சிகிச்சையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது போன்ற குளியல் இருதய அமைப்பை மேம்படுத்துவதாகவும் சருமத்தைப் புதுப்பிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

***இந்தக் கெட்ட செய்திக்கிடையே, ரஷ்ய நாட்டு வீரர்கள் உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான [அமைதிப்] பணிகளைத் தொடங்கியிருப்பதாக, சற்று முன்னர்[காலை 6.35 மணி] 'பாலிமர்' தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இது போர் நிறுத்தத்திற்கான முன்னோட்டமாக இருப்பின் பெரிதும் வரவேற்கத்தக்கது.

புடின் நல்லவரோ கெட்டவரோ, அரசியல் சூழல் அவரைப் போர் தொடங்கத் தூண்டியிருக்கலாம். உக்ரைன் தாக்குதலை நிறுத்துவதோடு, மன உறுதியுடன் போராடிப் புற்றுநோயிலிருந்து அவர் முற்றிலுமாய் விடுபடுதல் வேண்டும் என்பது நம் மனப்பூர்வமான விருப்பம்.

வாழ்க புடின்! வளர்க 'ரஷ்ய-உக்ரைன்' நட்பும் உலக அமைதியும்!!

==================================================================

https://news.lankasri.com/article/putin-bath-deer-antelers-blood-cancer-disease-1651547497