அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 16 மே, 2022

இணைய எழுத்தாளர்களுக்குச் சில எச்சரிக்கைகள்!!!


'இணையத் தொழில்நுட்பம்' கற்றவர்கள் இன்று எது எதற்கெல்லாமோ இதைப் பயன்படுத்துகிறார்கள்.

அழகுப் பெண்களை வசப்படுத்தல், ஆவணங்களை நகலெடுத்துப் பிறரின் வங்கிப் பணத்தைக் களவாடுதல், ஆபாசப் படங்களும் காணொலிகளும் பார்த்து ரசித்து இன்புறுதல், பிறரின் கடின உழைப்பில் உருவான படைப்புகளைத் திருடித் தன் உடைமை ஆக்கிக்கொள்ளல் என்றிப்படியான பல கெட்ட செயல்களுக்கு இந்தக் கணினித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தவொரு அவலத்தை எதிர்பார்த்துத்தானோ என்னவோ, பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, அமெரிக்காவிலுள்ள கணிப்பொறி நிறுவனம் ஒன்று[Computer Ethics Institute] கணினியில் எழுதுபவர்கள் பின்பற்றுதற்குரிய முக்கிய நெறிகளைப் பட்டியலிட்டுள்ளது.

அவை.....

*நீ கற்றறிந்த இந்தக் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவருக்கும் தீங்கு செய்திட நினைக்காதே.

*இதன் மூலம் உனக்கு நீயே கேடு விளைவித்துக்கொள்ளாதே.

*பிறர் பொருளையோ பணத்தையோ திருடும் இழி செயலைச் செய்யாதே.

*பிற கணினி எழுத்தாளர்கள் எழுதிச் சேமித்துவைத்திருக்கும் படைப்புகளைக் களவாடி அவற்றிற்குச்  சொந்தம் கொண்டாடுவது மிக மிக அற்பத்தனமான செயலாகும்

*அடுத்தவருக்குச் சொந்தமான கணிப்பொறிக்குள் திருட்டுத்தனமாய் உள்நுழைந்து அதிலுள்ள வசதிகளை உன் கணினியில் ஏற்றிடும் முயற்சி வேண்டாம்.

*மிக முக்கியக் கோப்புகளாயின் அவற்றை விலை கொடுத்து வாங்கு. குறுக்கு வழிகளில் அதை நகலெடுப்பது மிகவும் தவறான செயலாகும்.

*பிறர் மீது பொய்ப்பழி சுமத்துவதற்கோ பொய்ச் சாட்சி சொல்வதற்கோ கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

==================================================================
***பழைய 'கம்ப்யூட்டர் உலகம்'[டிசம்பர் 2000] இதழிலிருந்து பெற்ற தகவல்களின் தொகுப்பு இது.