அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 20 மே, 2022

பெரியாரின் பிடிவாதக் குணமும் அதீதப் புத்திசாலித்தனமும்!!!

பெரியார் மிகச் சிறந்த சிந்தனையாளர் மட்டுமல்ல, இளம் வயதில் கலைப் படைப்புகளை ரசிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். குறிப்பாக,  நாட்டிய நிகழ்ச்சிகளுக்குச் செல்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார்.

அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு நாட்டியக்காரியின் நடன நிகழ்வு எங்கு நடைபெற்றாலும் அந்நிகழ்ச்சிக்குச் சென்று நடனத்தைக் கண்டு களிப்பதை வழக்கமாக்கிகொண்டிருந்தார்.

ஒரு முறை, மைசூர் மகாராஜ திருமண நிகழ்ச்சியில் அந்த மாதுவின் நடனக் கச்சேரி இடம்பெற இருப்பது பெரியாருக்குத் தெரியவந்தது.

குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு மைசூர் சென்றார் பெரியார்.

அங்குச் சென்ற பிறகுதான் நடனக் கச்சேரியைக் காண்பதற்குப் பிரபலமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்தார். அப்போது அவர் பிரபலமானவராக இல்லாததால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மனம் வருந்தினார்.

ஆயினும், தனக்குப் பிடித்தமான நாட்டியக்காரியின் நடனத்தைக் கண்டு இன்புறாமல் ஊர் திரும்ப அவர் மனம் ஒப்பவில்லை. 

தீவிரமாகச் சிந்தித்து, நாட்டிய அரங்குக்குள் நுழைவதற்கான வழியையும் கண்டறிந்தார். அது..... 

பெரியார் தான் தொடங்கிவிட்ட எந்தவொரு செயலையும் முடிக்காமல் விடமாட்டார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.

பெரியார் கையாண்ட தந்திரம்.....

அருகிலிருந்த கடைவீதிக்குச் சென்று ஒரு ஜோடிக் கைத்தாளத்தை [ஜால்ரா] வங்கிக்கொண்டு வந்தார்; நாட்டியக் குழுவினரைச் சம்மதிக்க வைத்து, அவர்களில் ஒருவராக[ஜால்ரா தட்டுபவர்] அரங்குக்குள் நுழைந்தார். தனக்குப் பிடித்தமானவரின் நாட்டியத்தைக் கண்டு மகிழ்ந்து மனம் குளிர்ந்தார்!
=============================================================
ஆதார நூல்: 'எஸ்.அனிதா'வின் 'அறிவுக்கு விருந்தாகும் அரிய குறிப்புகள்'; சூர்யா பதிப்பகம், சென்னை. பதிப்பு: 2013.