பின்னர் இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் முதல் கணவர் மூலம் பிறந்த மகளுக்கு இவர் பாலியல் தொந்தரவு தரவே, இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கொஞ்சம் நாள் கழித்து, சதீஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். ஜெயிலுக்குச் சென்று வந்ததால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.//
இது செய்தி[https://www.dailythanthi.com/News/State/suicide-709632].
ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து இரு மனைவியரையும் விவாகரத்துச் செய்த இவன், மூன்றாவது மனைவியின் மகள் வேறொருவருக்குப் பிறந்திருந்தாலும் அவளைத் தன் மகளாகவே கருதிப் பாதுகாக்காமல் அடாத செயலில் ஈடுபட்டது கடும் கண்டனத்திற்குரியது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடுவதும் தவறில்லை. அரேபிய நாடுகளில் நடப்பது போல் கல்லால் அடித்துக் கொல்லப்படவேண்டியவன் இவன் என்றுகூடச் சொல்லலாம். ஆனால்.....
'மனம் உடைந்து காணப்பட்ட நிலையில் இவன் தற்கொலை செய்துகொண்டான்' என்னும் செய்திதான் நம்மைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.
இவன் முழுக்க முழுக்க ஒரு மிருகமாக இருந்திருந்தால், தனக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்படவிருக்கும் தண்டனையிலிருந்து தப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பானே தவிரத் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.
இவன் மனம் உடைந்துபோய் இருந்திருக்கிறான்.
நாலு பேர் மத்தியில் இனி தலை நிமிர்ந்து நடமாட முடியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
மூன்று பெண்களை அனுபவித்திருந்தும், 'போதும் என்னும் மனம்' இல்லாமல் ஒரு சிறுமியைச் சீரழித்துவிட்டோமே என்னும் மனசாட்சியின் சாடலும் காரணமாக இருக்கலாம்[பாலுணர்வு எத்தனைக் கொடூரமானது என்பதை எந்தவொரு கணத்திலும் மனித இனம் மறவாதிருப்பது மிகவும் அவசியம்].
ஆக, தான் செய்த குற்றங்களை நினைத்து வருந்துகிற மனித குணமும் இவனுக்கு இருந்திருப்பது தெரிகிறது.
மனிதப் பண்பு குறைந்து மிருகக் குணம் இவனிடம் மிக்கிருந்ததற்கு, இவனைப் பெற்றவர்கள் நல்ல வாழ்வியல் நெறிகளைக் கற்றுக் கொடுத்து வளர்க்காதது காரணமாக இருக்கலாம்; நிராதரவான நிலையில் இவன் வளர்ந்த சூழல் ஏதுவாக அமைந்திருக்கக்கூடும்.
எது எப்படியோ, ஒரு குற்றவாளியான இவன், தான் செய்த குற்றத்தை உணர்ந்து தனக்குதானே தண்டனை கொடுத்துக்கொண்டிருக்கிறான்.
எனவே, இவனை நல்லவன் என்றும் சொல்லலாமா?
சொல்லலாம். இவன் வாழ்ந்த சூழலே இவனைக் கெட்டவனாக வாழச் செய்திருக்கிறது என்பதே நம் பதில்.
=====================================================================================