ஆண்டுதோறும், உலக அளவிலான பள்ளி மாணவர்களின் எழுத்தார்வத்தை வளர்க்கும் வகையில் ஆங்கிலத்தில் நாவல் எழுதும் போட்டியை' நடத்துகிறது USA வைச் சேர்ந்த National Space Society என்னும் அமைப்பு.
முதல் இரண்டு சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கும் இப்போட்டியில் கலந்துகொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக 'முதல் பரிசு'களைப் பெற்றுச் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் நாமக்கல் நகரைப் பூர்வீகமாகக் கொண்ட, 'மிகுல் இளவரசு சியாமளன்[Migul Ilavarasu Shyamalen]' என்னும் மாணவர்.
இவரின் முதல் பரிசு பெற்ற நாவல்கள்:
1. Chain of Darkness (2021)
2. Cataclysm (2022)
பெங்களூரில் வசிக்கும் இவர், பெங்களூரு 'நாராயண கோ-காவேரி பவன்' பள்ளியில் 12ஆம் வகுப்பில் படித்துவருகிறார்.
'மிகுல் இளவரசு சியாமளன்' அவர்களுக்கு நம் பாராட்டுகள்.
மேலும் பல பரிசுகளை வென்று தொடர் சாதனைகள் நிகழ்த்த இவரை வாழ்த்துகிறோம்.
வாழ்க மிகுல் இளவரசு சியாமளன்! வளர்க இவரின் எழுத்தாற்றல்!!
==========================================================================