பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 17 ஜூலை, 2022

'கலி'காலம்டா சாமி!!![பொழுதுபோக்கு]

கீழே படத்தில் இருக்கிற பொம்மணாட்டிக்குச் சொந்த ஊர் கேரள மாநிலமத்தின்'கண்ணூர் சோலையாடு'. பெயர் ஷைலஜா[வயசு 34].

இவர் சிறுவயதாக இருக்கும்போது இவருடைய முகத்தில் அதிக அளவு முடி வளர்ந்ததாம்; அக்கம் பக்கத்தாரெல்லாம் கேலி செஞ்சாங்களாம். ஆரம்பத்தில் வருத்தப்பட்டாலும் அப்புறம் பழகிப்போச்சாம்.

பெரிய மனுஷி ஆனதுக்கப்புறம் பாலக்காட்டைச் சேர்ந்த லட்சுமணனுக்கும் இந்த அம்மணிக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்புறம், திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 

அப்புறம்.....

"அப்புறம் என்ன, குழந்தை பெத்துகிட்டாங்க, பொண்ணா பொறந்துடிச்சேன்னு வருத்தப்பட்டாங்க"ன்னு வெட்டிக்கதை சொல்லப்போறியான்னு கேட்குறிங்கதானே?

இல்லீங்க, நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல; நடந்ததே வேறு; நீங்க கொஞ்சமும் எதிர்பாராதது.

திருப்பூரில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்தே மீசை வளர்க்க ஆரம்பிச்சுது இந்த அம்மா. அதுவும் அட்டகாசமான அழகு மீசை. படத்தைப் பாருங்க.

பாலின பாகுப்பாட்டை உடைத்தெறிந்த திருமணமான பெண்! குடும்பத்தினரும் உறுதுணையாக ஆதரவு | Meeshakari Shaija Kerala Women With Musthache

இப்போது இந்தப் பகுதியில் உள்ள பெண்கள்கூட ஷைலஜா மாமி வளர்க்கும் மீசையைப் புகழ்ந்துதள்ளுறாங்க;  மீசை வளர்ப்பதற்கு ஆதரவும் அளிக்கிறாங்க. கேலி பேசிய ஆண்கள்கூட வாய் வலிக்கப் பாராட்டுறாங்களாம்.

ஒட்டுமொத்தத் திருப்பூரே 'மீசைக்காரி ஷைலஜா' பற்றியே பேசுது. இவங்களைத் தெரியாதவங்களே இல்ல. ஏன், இந்தப் புரட்சிப் பெண்மணியோட புருசனே ஆதரவு தெரிவிச்சுட்டாராம்; மீசை வளர்ப்பு பற்றி விதம் விதமா அலோசனைகள் தர்றாராம்.

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்கச் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சருமத்தில் இருக்கும் ரோமங்கள் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவினால் போதும், முடி காணாமப் போயிடும்.

கால் கப் கடலை மாவு, கால் கப் தேன், ஒரு கப் தண்ணீர் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு என்று நான்கையும் ஒன்றாகப் பேஸ்ட் போல் கலந்து முகத்தில் சீராகத் தடவினால் முடி நீங்கிடும்.

ஒரு முட்டையின் வெள்ளைப் பகுதி, ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரை ஸ்பூன் மக்காச்சோள மாவு ஆகியவற்றை ஒன்றாகப் பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் காத்திருந்தால் ரோமம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

இப்படி எத்தனையோ இயற்கை வைத்தியங்கள் இருக்கு.

அதில்லாம,  பிளக்கிங், வேக்ஸிங், ஷேவிங் என்று ஏதேதோ செய்கிறார்கள்.

மேலும், ஏகப்பட்ட லோசன் அது இதுன்னு நிறையச் சாதனங்கள் இருக்கும் நிலையில் இந்த அம்மையார் இப்படி மீசை வளர்ப்பது ஒரு புரட்சிகரமான செயல்னு நமக்குத் தோணுது["பொண்ணுன்னா, முகம் பளிச்சின்னு வழவழா தளதளா பளபளான்னு இருந்தாத்தான் மூடு வரும்"னெல்லாம் ஆண்கள் முணுமுணுக்காதீங்க}.

இதைக் 'கலியுகப் புரட்சி'ன்னு சொல்லலாமா?

மீசை வளர்த்தாப் போதாது. கூந்தலை வெட்டி எடுத்துட்டுக் 'கிராப்' வைத்துக்கொள்ளலாம். காதுல உள்ள தொங்கட்டானைக் கழட்டிடலாம். கழுத்தில் வடக்கயிறு போல் தடித்த சங்கிலி மாட்டிக்கலாம். மேலும், தாடி முளைக்கும்னா, வளர்த்து 'ட்ரிம்' பண்ணிட்டுக் கம்பீரமா ஒரு ஆண்பிள்ளையா நடமாடலாம். எந்தவொரு காலிப்பயலும் நெருங்கிவந்து தொட்டுப் பேசப் பயப்படுவான். 

செய்வாரா ஷைலஜா?

===================================================================================

ஆதாரம்: https://news.lankasri.com/article/meeshakari-shaija-kerala-women-with-musthache-1657963282?itm_source=parsely-api

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக