சனி, 16 ஜூலை, 2022

குடு குடு குடு கிழவியும் 'கபட வேடதாரி'க் கடவுளும்!!!


ஷ்யாவை சேர்ந்த கோபு என்ற பெண்மணி 1889ஆம் ஆண்டு பிறந்துள்ளார். 129 வயதாகும்[இப்போதும் உயிருடன் இருந்தால் 131 வயது] இவர் உலகின் மிக வயதான பெண்மணி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கோபு இரண்டாம் உலகப்போரின்போது, தான் ரஷ்யாவிலிருந்து வெளியேறித் தலைமறைவாக இருந்ததாகக் கூறியுள்ளார். மேலும், நீண்ட நாள் வாழ்வதுகூடக் கடவுள் கொடுக்கும் தண்டனைதான் என்றும் அந்தப் பாட்டி கூறியுள்ளாராம்[https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/long-life-is-a-god-s-penalty-world-s-oldest-women-says-118101400009_1.html].

அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. காரணம் பின்வருமாறு இருக்கலாம்.

"மற்ற உயிரினங்களுக்குக் கொடுத்ததையும்விட மேலானதொரு ஆறாவது அறிவான சிந்திக்கும் அறிவை மனிதனுக்குத் தந்து 'பேரருளாளன்' என்று நம்ப வைத்த கடவுள், போட்டி மனப்பாமை, பொறாமை, சூதுவாது, வஞ்சகம், வெஞ்சினம், கட்டுக்கு அடங்காத காம வெறி என்று மிகப் பல தீக்குணங்களைத் தந்ததோடு, இனம், மதம், நாடு போன்றவற்றின் பெயரால் மனிதர்களோடு மனிதர்களை மோதவிட்டுப் பேரழிவுகளை நிகழ்த்திப் பெரும் பெரும் துன்பங்களுக்கு ஆட்படுத்துவதால் அவன் ஓர் அயோக்கியன்.

அவன் படைத்த இந்த உலகில் என்னைப் போல் நீண்ட நாள் வாழ்வதுகூடத் துன்பம்தான்" என்று சொல்லியிருப்பார் 'கோபு' என்னும் அந்தப் பெண்மணி.

இப்படி அவர் சொல்லியிருந்தால் அதை எப்படி நம்மால் மறுத்துரைக்க இயலும்?!
====================================================================================