செவ்வாய், 6 செப்டம்பர், 2022

Asbestos அட்டையால் விளையும் மிகப் பெரிய தீங்கு!!!

இந்தியாவில், அதிகமான எண்ணிக்கையில் மனிதர்களைத் தாக்கும் அரியவகைப் புற்றுநோய்களில் "மேசொதெளியோமா"[Mesothelioma]வும் ஒன்று

கட்டுமானங்களில், வீட்டுக்கூரைகளில், தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாசு(Asbestos)வை நுகர்வதால், நுரையீரலிலும், அடிவயிற்றிலும், இதயத்திலும் உருவாகிறது இந்த வகைப் புற்றுநோய்.

உலக அளவில், பெரும்பாலான நாடுகளில், ஆசுபெசுடாசுப் பயன்பாடு தடைசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலோ தொழிலகங்களில்/வீடுகளில் மேற்கூரையாக, பந்தல்களாகப் பயன்படுத்தப்படுவதும், வேலைக்குச் செல்லும் மக்கள் நுகர்வதும் குறையவில்லை என்றுதான் தோன்றுகிறது.

அதோடு, "மேசொதெளியோமா" இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட ஒருவர் ஓராண்டுக்கும் மேலாக உயிர்வாழ்வதில்லை என்கிறது மருத்துவப் புள்ளிவிவரம். ஆனால், இந்த நோய்க்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால்.....

இந்த நோயைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தே உண்டாக்கி, ஆசுபெசுடாசு பயன்பாட்டை முழுமையாகத் தடைசெய்தால் மட்டுமே மக்களைக் காப்பாற்றுவது சாத்தியமாகும்.https://www.bbc.com/tamil/science-62745134

=========================================================================
=========================================================================