திங்கள், 19 செப்டம்பர், 2022

அம்மணக் குண்டி மனிதருக்கு ஆடை கட்டிவிட்டவர் கடவுளா?!?!

மனிதர்கள் விலங்குகளாக இருந்தவரை நிர்வாணமாகத்தான் திரிந்தார்கள்.

ஆறாவது அறிவான சிந்திக்கும்  அறிவு வாய்த்த பின்னர்தான் இலைதழைகளைத் தைத்து உடுக்கும் பழக்கம் உருவானது.


அப்புறம், நார்களால் பின்னப்பட்ட ஆடைகளையும், பின்னர் நூலாடைகளையும் உடுத்தத் தொடங்கினார்கள்.


ஆடைத் தயாரிப்பு குறித்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே விதம் விதமான அழகழகான வண்ண வண்ண ஆடைகள் உருவாகக் காரணமாய் அமைந்தது.


பெண்களைப் பொருத்தவரை அழகுக்கு அழகு சேர்க்கவும் ஆடை பயன்பட்டது.


செல்வந்தர்கள் ஆடம்பரத்திற்காக அதிகச் செலவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை உடுத்தினார்கள்.


துறவிகள் பிறரிடமிருந்து தம்மை வித்தியாசப்படுத்துவதற்காகக் காவி உடை தரித்தார்கள்.


மிகையான வெப்பத்தாலும் குளிராலும் உடம்புக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆடையை வடிவமைத்தார்கள்.


கோடைக் காலங்களில் ஆடையைக் குறைத்து உடுத்துவதையும், கடும் குளிர்காலங்களில் உடல் முழுவதையும் போர்த்துவதையும் வழக்கமாக்கினார்கள்.


ஆக,


மனிதர்களின் வாழும் சூழ்நிலை, பருவநிலை, மனநிலை ஆகியவற்றைப் பொருத்து ஆடை உடுத்துவதில் வேறுபாடுகள் உருவாயின என்பதே உண்மை.


மற்றபடி, ஆண் என்பவன் எப்படியும் ஆடை உடுத்துத் திரியலாம்[சில நாடுகளில் விதிவிலக்கான சிலர் இருக்கக்கூடும்] பெண் எனப்படுபவள் வீட்டை விட்டு வெளியே வந்தால் உடல் முழுக்கப் போர்த்துக்கொள்ளுதல் வேண்டும்[ஆபாசம் இல்லாமல் ஆடை உடுத்துவதை வலியுறுத்துவதில் தவறே இல்லை] என்று கடவுள் சொன்னதாகச் சில மதம் சார்ந்தவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.


ஆடை உடுத்துவதில் அதீதக் கட்டுப்பாடு விதித்துப் பெண்களை இழிவுபடுத்துவதில் முதல்நிலை பெற்ற நாடாக விளங்குவது ஆப்கானிஸ்தான். இதைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கிறது ஈரான் நாடு. தொடர்புடைய செய்தி.....


#ஹிஜாப் சரியாக அணியாததால். தலை முடி வெளியே தெரிந்ததாகக் கூறி, போலீசார் தாக்கியதில் கோமா நிலைக்குச் சென்ற இளம்பெண் 'மாஷா அமினி' உயிரிழந்த

சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


காவல்துறை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாஷா அமினிக்கு

ஆதரவாக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.


மாஷாவின்

சொந்த

ஊரான சஹிஸ்

நகரில் நேற்று

திரண்ட

நூற்றுக்கணக்கான

பெண்கள், தாங்கள்

அணிந்திருந்த

ஹிஜாப்பை

கழற்றி எறிந்தும்,

ஹிஜாப்களை 

எரித்தும், தலை

முடியை வெட்டியும் போராட்டத்தில்

ஈடுபட்டனர்.


மேலும், ஈரான் அதிபர்

இப்ராகிம் ரைசிக்கு

எதிராக ஆர்பாட்டத்தில்

ஈடுபட்ட பெண்கள்

'சர்வாதிகாரிக்கு

மரணம்' என்ற

முழக்கத்தையும்

எழுப்பினர்#

ஈரான் நாட்டுப் பெண்களின்

போராட்டம் வெற்றி பெறுதல்

வேண்டும் என்பது

நம் விருப்பம். ஏனைய நாட்டுப்

பெண்களும் இவர்களுக்கு

ஆதரவாகப்

போராட்டம் நடத்துவது

வரவேற்கத்தக்கது.

======================================================================


https://www.dailythanthi.com/

News/World/iran-protesting-women-

take-off-hijabs-

after-22-year-old-arrested-for-

dress-code-violation-dies-795238