அமெரிக்காவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துவருவதாகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.SD
சில நாட்களுக்கு முன்பு, 'பியூ ஆராய்ச்சி மையம்' & பொது சமூக ஆய்வு' ஆகியவை வெளியிட்டதொரு புதிய அறிக்கையில் கிறிஸ்தவத்தைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகவும், அதனால், கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் 'நாத்திகர்கள்' என்றோ, மதச்சார்பற்றவர்கள் என்றோ குறிப்பிடப்படுகிறார்கள். 30 வயதுக்குட்பட்ட கிறித்தவர்கள் பலரும் அம்மதத்திலிருந்து வெளியேறுகிறார்களாம். இபோதைய இந்த நிலை தொடருமேயானால், கி.பி.2045ஆம் ஆண்டுக்குள் கிறித்தவம் சிறுபான்மை மதமாக ஆகிவிடக்கூடும் என்கிறது ஆய்வு முடிவு. இந்தச் சரிவு 1990லிருந்தே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
1990களின் முற்பகுதியில் அமேரிக்கர்களில் 90% பேர் கிறித்தவர்களாக அடையாளம் காணப்பட்ட நிலை 2020ஆம் ஆண்டில் 64% ஆகக் குறைந்துள்ளது. இதனோடு ஒப்பிடுகையில், மதச்சார்பில்லாதவர்கள் அல்லது, நாத்திகர்களின் எண்ணிக்கை கீழ்க்காணும் வகையில் உயர்ந்துள்ளது.
2007இல் 16% ஆக இருந்த அவர்களின் தொகை 2020இல் 29% ஆக அதிகரித்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு கிறித்தவ மதத்திலிருந்து எவரும் வெளியேறாமல் இருப்பார்களேயானால், 2070ஆம் ஆண்டுவரை அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் தங்களின் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தத் தகவல்கள் ஆய்வாளர்களின் கணிப்பை அடிப்படையாகக்கொண்டு வெளியிடப்பட்டவை.
கிறித்தவ மதத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெளியேற, அந்த மதம் சிறுபான்மை மதமாக மாறுவது சாத்தியம்தான் என்றாலும், இவர்களில் எவரும் இஸ்லாம், இந்து போன்ற மதங்களில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை.