அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

'புற்றுநோய்க் குழந்தைகள்'... பதறுகிறது மனம்! பற்றி எரிகிறது ஒட்டுமொத்த உடம்பும்!!

#வெளிநாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 90 விழுக்காடு[%] பேர் உயிர் பிழைக்கிறார்கள். நம் நாட்டிலோ 40 விழுக்காடு குழந்தைகள்தான் உயிர் பிழைக்க முடிகிறது. ஒரு குழந்தைக்கு 5 லட்சம் செலவு செய்து இரண்டரை ஆண்டுகள் சிகிச்சை பெற்றால் பெரும்பாலும் அது உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், நம் நாட்டில் அது சாத்தியப்படுவதில்லை#['ராணி' வார இதழ்[04.09.2022இல் வெளியான ஒரு கட்டுரையில்].

காரணம்.....

வறுமை ஐயா, வறுமை... வறுமை.

இந்த வறுமை காரணமாகப் புற்றுநோயால் மட்டும் இறந்துபோகும் குழந்தைகள் 60 விழுக்காட்டுக்கும் அதிகம். இப்படி, ஆயிரக் கணக்கில் ஏழைக் குழந்தைகளைப் பலிகொள்ளும் நோய்கள் மிகப் பல.


இது குறித்த தகவல்களை, திருமணம், பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் ஆடம்பரப் பிரியர்களும், விசேட பூஜை, ஆராதனை, அபிசேகம், தேர்த் திருவிழா, குடமுழுக்கு என்னும் பெயர்களில் பணத்தை வீணடிக்கும் பக்தர்களும் அறிவார்கள்.

அறிந்திருந்தும், அர்த்தமற்ற செயல்களைப் புறக்கணித்து, ஓரளவுக்கேனும் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வராத, மனிதாபிமானமே இல்லாத இந்தக் கல்நெஞ்சக்காரர்கள் ஒருபுறம்!

விநாயக சதுர்த்தி என்னும் பெயரில், வண்ண வண்ணக் களி மண் சிலைகளை வடித்து வீணாகக் கடலிலும் ஆற்றிலும் குளங்களிலும் குட்டைகளிலும் கரைத்துப் பல்லாயிரக் கணக்கில் பணத்தை வீணடிக்கும் பேதைகள் இன்னொரு புறம்.

இவர்களின் அடாத செயல்களால்.....

பதறுகிறது மனம்! பற்றி எரிகிறது ஒட்டுமொத்த உடம்பும்!


===========================================================================