புதன், 21 செப்டம்பர், 2022

ஈரான் 'ஹிஜாப்' போராட்டம்: காணொலித் தலைப்பு: 'Death to Islamic Republic'!

ஈரானில், ஹிஜாப் சரியாக அணியாததால். தலை முடி வெளியே தெரிந்ததாகக் கூறி, போலீசார் தாக்கியதில் கோமா நிலைக்குச் சென்ற இளம்பெண் 'மாஷா அமினி' உயிரிழந்ததும், உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்ததும், நூற்றுக்கணக்கான பெண்கள், தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பைக் கழற்றி எறிந்தும், ஹிஜாப்களை எரித்தும், தலைமுடியை வெட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டதும் ஏற்கனவே ஊடகங்களில் வெளியான செய்திகள்[இதைத் தொடர்புபடுத்தி நாமும் ஒரு பதிவு வெளியிட்டோம்].

ஊடகச் செய்திகளின்படி, ஈரான் பெண்களின் போராட்டம் தொடர்வதாகத் தெரிகிறது.

மேலும் பல பெண்கள் தங்களில் ஹிஜாப்புகளை அகற்றுவதோடு மட்டுமல்லாமல்.....

ஈரானின் தலைநகர் 'டெஹ்ரான்'இல் பெரும் எண்ணிக்கையில் திரண்டு, அரசுக்கு எதிராக முழக்கமிடுகிறார்களாம்.

ஈரான் அரசின் தேசியக் கொடியை இறக்கும் அளவுக்கு அப்போராட்டம் உச்சத்தைத் தொட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஈரானில் இறுக்கமாகக் கால்சட்டை அணிதல், ஜீன்ஸ் பயன்படுத்தல், முழங்கால் தெரிய ஆடை உடுத்துதல் போன்றவற்றிற்கும் அரசு ஏற்கனவே தடை விதித்திருக்கிறது.

தொடரும் போராட்டத்தின் விளைவாக, மாஷா அமினியின் மரணம் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதும் ஊடகங்களில் வெளியாகியுள்ள புதிய செய்தியாகும்.

போராடும் பெண்கள்[இவர்களுக்கு ஆதரவாக ஆண்கள் போராடுவதையும் காணொலி வாயிலாக அறிய முடிகிறது], அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தங்களின் போராட்டத்தைக் கைவிடுவார்களா?

அல்லது.....

ஹிஜாப் அணிதலைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று கோரிக்கை வைத்துத் தங்களின் போராட்டத்தைத் தொடருவார்களா?

இவ்விரண்டில் நாளை நடக்கப்போவது எது என்பதை அறிய ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் காத்திருக்கும் என்று சொல்லலாம். குறிப்பாக, இஸ்லாமியப் பெண்கள் இது விசயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்றே சொல்லத் தொன்றுகிறது!

தொடரும் போராட்டம்... காணொலி: