'தற்காலிக உலகளாவிய மறதி நோய்'(TGA) உலக அளவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்படுகிறது.
பொதுவாக, இது 2மணி முதல் 8 மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது[அதிகபட்சம் 24 மணி]; நோயாளி பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவார்; மறதியைத் தவிர மற்ற அறிவாற்றல் குறைபாடு ஏதும் நேராது; குவிய நரம்பியல் கோளாறுகளுக்கு வாய்ப்பில்லை[Transient global amnesia(TGA) is a sudden, temporary interruption of short-term memory. Although patients may be disoriented, not know where they are or be confused about time, they are otherwise alert, attentive and have normal thinking abilities].
நோய்க்கான காரணங்கள்:
குளிர்ந்த அல்லது சூடான நீரில் திடீரென மூழ்குதல்
கடுமையான உடல் உழைப்பு
உணர்ச்சிவசப்படுதல், அல்லது, மன அழுத்தத்திற்கு உள்ளாதல்
சில தீவிர மருத்துவச் சிகிச்சைகள்
உடலுறவு
அதிகமாக மது அருந்துதல்
சில மயக்க மருந்துகள் அதிக அளவில் செலுத்தப்படுதல்
சட்டவிரோத மருந்துகளைப் பயன்படுத்துதல்
நோய்ப் பாதிப்பு... இரு நிகழ்வுகள்:
*'ஜான் பர்மிங்காம்' என்பவர் பத்திரிக்கை ஆசிரியர். அவர் மனைவி 'லோலா'. சற்று முன்னர் ஒரு பிறந்த நாள் நிகழ்வுக்குச் செல்லத் தன்னை அலங்கரித்துக்கொண்டார் அவர். ஆனால், அப்போது உடை மாற்றியது[அலங்கரித்துக்கொண்டது] எதற்கு என்பது மறந்துபோகக் குழப்பமான மன நிலையில் இருந்தார். கணவர் நடந்ததை விவரித்தும்கூட அது அவரின் நினைவுக்கு வரவில்லை.
நினைவு திரும்பச் சில மணி நேரங்கள் ஆயின.
*அயர்லாந்தைச் சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியுடன் உடல் உறவு கொண்டார். பின்னர், 10 நிமிடம் கழித்து, கைபேசியில் முந்தைய நாள் தன் திருமண நாள் என்பதை அறிந்து, மனைவியிடம், "நேற்று நம் திருமண நாள் என்பது மறந்தேபோனது. நீயாவது நினைவுபடுத்திருக்கலாமே" என்றார்.
இதைக் கேட்டு அவர் மனைவி அதிர்ச்சியடைந்தார். காரணம், முந்தைய நாளில் அவர்கள் திருமண நாளைக் கொண்டாடியிருந்ததுதான்.
அவரின் பேச்சு அவரின் மனைவிக்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அவருக்கு 'டிரான்சிட் குளோபல் அம்னீசியா'[தற்காலிக மறதி நோய்] இருப்பதும், அதற்கான காரணம் அவர் மனைவியுடன் உடலுறவு கொண்டதுதான் என்பதும் கண்டறியப்பட்டன.
இவர் ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு இதேபோல், மனைவியுடனான உடலுறவுக்குப் பிறகு, தற்காலிக மறதி நோய் ஏற்பட்டுப் பின்னர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நோய் அதிக அளவில் பாதிப்புகளை உண்டுபண்ணுமா என்பது குறித்து மருத்துவ வல்லுனர்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்களாம்.
முக்கியக் குறிப்பு:
இந்த நோய் நம் ஊர்களிலும் உள்ளதா, அல்லது, எப்போது வருகை புரியும் என்பது குறித்தத் தகவலைத் தேடிப் பெற்றிட இயலவில்லை.
எதற்கும், 60 வயதைக் கடந்த கிழங்கள் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. கிழவிகள் எஞ்சிய வாழ்நாளை நிம்மதியாகக் கழிப்பதற்கும் அது வழிவகுக்கும்!
===================================================
https://www.mayoclinic.org/diseases-conditions/transient-global-amnesia/symptoms-causes/syc-20378531
https://www.ncbi.nlm.nih.gov/books/NBK442001/
https://emedicine.medscape.com/article/1160964-overview