உலக அளவில் இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கும் பழங்குடி இன மக்களின், மாறுபட்ட பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ளும் முனைப்புடன், தேடுபொறிகளில் தேடிச் சேகரித்தவற்றில் கணிசமான தகவல்களை இங்குப் பதிவு செய்திருக்கிறேன்.
*பிரேசில் நாட்டில் வாழும் பழங்குடிப் பெண்களுக்கு ..... பருமனாக இருப்பது பிடிக்குமாம். அதை அவ்வாறு ஆக்குவதற்கு, குறைந்த அளவில் விஷமுள்ள பாம்புகளைக்கொண்டு ஆண்கள் தங்களுடையதைக் கடிக்க வைப்பது ஒரு வழக்கமாக உள்ளது.
*மைக்ரோனேஷியாவின் பனாபே பழங்குடிப் பெண்களை உற்சாகப்படுத்த[‘அது’ விசயத்தில்தான்]க் கொட்டும் எறும்புகளைக்கொண்டு கடிக்க வைக்கிறார்கள்.
*கொலம்பியாவின் தென்மேற்கில் அமைந்துள்ள காலி நகரில், ஒரு பெண்ணின் முதலிரவின்போது, அதற்குச் சாட்சியாக அவளின் தாய் முன்னிலை வகிக்க வேண்டும்.
*சாம்பியா சமூகத்தைச் சேர்ந்த மணமாகவிருக்கும் இளைஞர்கள், மூன்று ஆண்டுகள் பெண்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், இளைஞர்கள் கட்டாயமாக ஒருவிதப் பானம் பருக வேண்டும். பழங்குடிப் பெரியவர்களின் விந்து கலந்து தயாரிக்கப்பட்டது அந்தப் பானம்.
*பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவான 'மங்கையா'வில் வசிப்பவர்கள் இளம் தலைமுறை ஆண்களுக்குப் பாலியல் ஞானத்தைக் கற்றுக்கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். சிறுவனுக்கு 13 வயது ஆனவுடன், அவன் 'அனுபவசாலி'யான பெண்ணைத் தன் குருவாகக் கொள்ளுதல் வேண்டும். அவள் தான் தெரிந்துவைத்திருக்கும் அனைத்து 'அந்தரங்க' ரகசியங்களையும் அவனுக்குக் கற்பிப்பாள். இதன் மூலம் அவன் தன் வருங்கால மனைவியை எப்போதும் அது விசயத்தில் சந்தோசமாக வைத்துக்கொள்வான்.
*கம்போடிய ‘க்ரூங்’ பழங்குடியினரின் விசயங்கள் வேறுபட்டவை. அங்கே, ஆண்கள் தங்கள் மகள்களின் ஆரம்பகாலக் காதல் உறவுகளை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்காகச் சிறப்புக் 'காதல் குடிசை'களை உருவாக்குகிறார்கள், அங்கே, அந்தப் பெண்கள், ஆண்களை நன்றாகவும் சிறப்பாகவும் புரிந்துகொள்வதற்கு, விரும்பிய ஆண்களை அங்கே அழைத்து வரலாம்.
*ஆப்பிரிக்கப் பழங்குடியினரிடம் ஒரு கொடூரப் பழக்கம் உள்ளது. திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண், தனக்கு மனைவி ஆகப்போகிறவளின் தாயுடன்… [சீச்சீ, கருமாந்தரம்]. அவள் "ஓகே” சொன்ன பிறகுதான் திருமணம் நடக்கும்.
===============================================================================