இயற்கைத் தத்துவம், கடவுள் தத்துவம் ஆகியன பற்றி ஒப்பீட்டு முறையில் விரிவாக அறிதல் முயற்சியை மேற்கொண்டபோது, எதிர்பாராத வகையில், பதிவின் இறுதியில் இடம்பெற்றுள்ள 'மெய்யியல்'[தத்துவம்], 'மீமெய்யியல்', 'இறையியல்', 'அறிவியல்', ஆகிய நான்கினையும் பற்றிய சுவையான விளக்கக் குறிப்புகளை[படம்] வாசித்து மகிழும் வாய்ப்பு அமைந்தது.
பதிவுலக அன்பர்களுக்கும் அந்த வாய்ப்பை வழங்கிடவே இந்தப் பகிர்வு.
'தத்துவம்'[உயிர்கள்&உலகங்கள் பற்றிய அடிப்படை உண்மைகளை ஆராய்தல்] என்பது இருட்டு அறையில் இருந்தவாறு கருப்புப் பூனையைத் தேடுவது போன்றது.
'மெட்டாபிசிக்ஸ்'[மெய்யியலின் ஒரு கிளை ஆகும். அது "இருப்பு"(being) என்றால் என்ன, "உலகு" என்பதன் பொருள் யாது போன்ற வேரோட்டமான கேள்விகளை எழுப்பி, அவற்றிற்கு விடைதேடுகின்ற அறிவியல் சார்ந்த ஒரு துறை]என்பது இருட்டு அறையில் இருந்துகொண்டு இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவதை ஒத்தது.
'இறையியல்'[கடவுள் குறித்து ஆராய்தல்]இருட்டு அறையில் இருந்து கொண்டு, இல்லாத கருப்புப் பூனையைத் தேடி முடித்து, "கண்டுபிடித்துவிட்டேன்" என்று கூக்குரலிடுவதைப் போன்றது!
'அறிவியல்'[பொருள்களையும் உயிர்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் தோற்றம்&இயக்கம் பற்றிய இயற்கை நெறிகளை ஆராய்வது] இருட்டு அறையில் இருந்தவாறு, நன்கு ஒளிரும் விளக்குடன் ஒரு கறுப்புப் பூனையைத் தேடுவதை ஒத்தது.
[தத்துவம் முதலானவற்றை முழுமையாக வேறுபடுத்திக் காட்ட இன்னும் விரிவான விளக்கம் தேவை என்பது அறியத்தக்கது]