#உத்தரபிரதேச அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்(ஏஐஎம்ஐஎம்) தலைவர் ஷௌகத் அலி, ஒரு கூட்டத்தில் பேசுகையில், "முஸ்லீம்கள் இரண்டு அல்லது மூன்று முறை திருமணம் செய்துகொள்கிறார்கள், எல்லா மனைவிகளுக்கும் மரியாதை கொடுப்பார்கள். ஆனால், ஒரு இந்து ஆண் ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்துகொள்கிறான்; அவளுக்கு மரியாதை கொடுப்பதில்லை" என்று கூறினார்# -'ஜீ நியூஸ்'
அவர் தொடர்ந்து வெளியிட்ட கருத்துகளோ, அவர் மீது 'மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்ததற்காக' உ.பி.யின் சம்பல் மாவட்டத்தில் இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதோ நமக்குப் பொருட்டல்ல.
"இரு மனைவிகளுக்கும் சம மரியாதை அளிக்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளதுதான் நம் உள்மனதை உறுத்துகிறது..
சவுக்கத் அலி அவர்களே,
நீங்கள் இரு பெண்களை மணப்பதோ, அல்லா அனுமதிப்பதாகச் சொல்லி இருநூறு பேரைத் திருமணம் செய்வதோ[ஹி... ஹி... ஹி!!!] உங்களின் விருப்பம் சார்ந்தது, அத்தனை பேரும் மனப்பூர்வமாகச் சம்மதித்தால்.
இரு மனைவியருக்கும் சம 'மரியாதை'[respect] வழங்குவதாகச் சொல்லியிருக்கிறீர்களே, அதற்குப் பெயர் மரியாதை அல்ல; அவமரியாதை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
மனைவி என்று ஒருத்தி இருக்க[முதலில் மணக்கப்பட்டவள்], உடலுறவுச் சுகத்திற்காக இன்னொருத்தியை வைப்பாட்டியாக வைத்துக்கொள்வது எப்படி அயோக்கியத்தனமோ, அப்படியான அயோக்கியத்தனம்தான் இன்னொருத்தியை மனைவி ஆக்கிக்கொள்வதும்.
'ஒருவன் ஒருத்தி' என்று வாழ்வதுதான் ஒருத்திக்கு ஒருவன் தரும் மரியாதை. ரெண்டு மூனுன்னு கட்டிகிட்டு அவர்களுக்கு மரியாதை தருகிறேன் என்று சொல்வது கடைந்தெடுத்த பொறுக்கித்தனம்; பித்தலாட்டம்.
பொதுவாக, ஒரு பெண்[முஸ்லீம் பெண்களும் அடக்கம்] இரண்டு மூன்று ஆண்களைக் கல்யாணம் செய்துகொண்டு, அவர்களைச் சம அளவில் மதிக்கிறேன்; சம அளவில் அவர்கள் மீது அன்பு செலுத்துகிறேன் என்றால் ஆண் இனம்[எல்லா ஆண்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்] ஏற்குமா?
இஸ்லாம் ஆண்களாகிய நீங்களும் இதற்கு விதிவிலக்கு அல்லவே.
அப்புறம் என்ன, மரியாதை தருகிறீர்கள் ... வெங்காய மரியாதை!
உங்களைப் போன்றவர்களுக்கு நம்மைப் போன்ற மதச்சார்பற்ற நடுநிலையாளர்கள் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு. அது.....
உங்களின் ஆவேசச் சொற்பொழிவில், இந்து மதம் சார்ந்தவர்களை இளக்காரமாக "பூச்சிகள்" என்று குறிப்பிட்டு அவமானப்படுத்தியிருக்கிறீர்கள்.
இந்த நாட்டில் 832 ஆண்டுகள் ஆட்சி செய்தோம், நீங்கள் (இந்துக்கள்) எங்கள் ஆட்சியாளர்களுக்கு முன்னால் தலைவணங்கி இருக்கிறீர்கள்" என்று சொல்லி அவர்களை உசுப்பிவிட்டிருக்கிறீர்கள்.
கண்டிக்கத்தக்க செயல்கள் இவை.
இங்கு, சிறுபான்மையினராக வாழும் உங்களுக்குத் தங்களைப் பெரும்பான்மையினர் என்று சொல்லிக்கொள்ளும் இந்துத்துவாக்காளால் சிறு ஊறு நேர்ந்தாலும், அதை மனப்பூர்வமாகக் கண்டிப்பதை வழக்கமாகக் கொண்ட மதச் சார்பற்ற மனித நேயர்கள் கணிசமான அளவில் இங்கு இருக்கிறார்கள்.
இம்மாதிரியான, உங்களைப் போன்றவர்களில் அநாகரிகப் பேச்சு தொடருமேயானால் அந்த நடுநிலையாளர்களின் ஆதரவை முற்றிலுமாக இழப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இது எம்மைப் போன்றோரின் எச்சரிக்கை அல்ல; வேண்டுகோள் மட்டுமே.
===================================================================https://www.msn.com/en-in/entertainment/news/we-have-2-wives-and-give-respect-to-all-but-hindus-marry-one-woman-and-keep-3-aimim-up-chief/ar-AA12ZRq5?ocid=msedgdhp&pc=U531&cvid=ac4387bd947942e9a4c2e387270b2a9f