புதன், 2 நவம்பர், 2022

கோயிலின் நேர் எதிர் வீட்டில் குடியிருப்பது குற்றமா?!

'கோயிலுக்கு முன்னால் குடியிருத்தல் ஆகாது' என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்களாம். அதற்குச் சொல்லப்படும் காரணங்களில் முக்கிய மூன்று கீழே இடம்பெற்றுள்ளன. அவற்றை அடியொற்றி அடியேனின் சந்தேகங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


காரணம் 1: கோயிலுக்கு நேர் எதிரே குடியிருப்பு அமையக்கூடாது. அமைந்தால் அது ‘ஆலயக் குத்து’ எனப்படும்[சாமி கண்ணைக் குத்திடுமா?]. அந்த வீட்டில் அதிக ஆசாரத்துடன் இருத்தல் வேண்டும். குறிப்பாக, மாதவிலக்கு நாட்களில் பெண்கள் அந்த வீடுகளில் தங்கக் கூடாது.

ஐயம்:
மாத விலக்கான பெண்கள் வீட்டில் இல்லாம வேறு எங்கே அடைக்கலம் தேடிப் போறது? 

கோயிலுக்கு எதிரே மாதவிலக்கு ஆகக்கூடாதுன்னா, கழிப்பறையில் ஆயி[மலம்], மூத்திரம் எல்லாம் போகலாமா? இதுகளைவிடவும் மாதவிலக்கு அசிங்கமானதுன்னு எந்த மடையன் சொன்னான்?



காரணம் 2. தம்பதியர் கண்ட கண்ட நேரத்திலெல்லாம் உடலுறவு கொள்வது அபச்சாரம். கட்டுப்பாடு தேவை.

ஐயம்: 
கட்டுப்பாடுன்னா என்ன? புரியலையே. கோயிலுக்குப் போயி, தாலாட்டுப் பாடி சாமியைத் தூங்க வைச்சிட்டு வந்து உடலுறவில் ஈடுபடுறதா? சாமி கோயிலைவிட்டு வெளியேறி ஊர்வலமோ சுற்றுலாவோ போற நேரம் பார்த்துப் புணர்ச்சி பண்ணுறதா?


காரணம் 3:
வீட்டுக்கு எதிரே பாழடைந்த வீடு, பாழ்பட்ட கிணறு, குட்டிச்சுவர் எல்லாம் இருத்தல் கூடாது.

ஐயம்:
இருந்தா..... பாழடைஞ்ச வீடு, கிணறு, குட்டிச்சுவர் மாதிரி கோயிலும் பாழடைஞ்சி போயிடுமா?

குட்டிச்சுவர் அவசரத்துக்கு ஒதுங்குற இடம். ஒன்னுக்கு இருக்கிறது; ‘அது’ விசயத்தில் குடிசைகளில் வாழ்கிற பாவப்பட்ட ஏழைக் குடும்பத்து ஆணும் பெண்ணும் 'ஒன்னா' இருக்கிறது எல்லாம் நடக்கிற இடம். 

கோயிலில் குடியிருக்கிற சாமி இதையெல்லாம் கண்டும் காணாம இருக்கப் பழகிக்கணும்!

பாழடைந்த வீடு க்கான பட முடிவு
===========================================================================
கொஞ்சம் ஆண்டுகளுக்கு முன்பு, 'பசி'பரமசிவம்' என்னும் சொந்தப் பெயரிலேயே[http://pasiparamasivam.blogspot.com] ஒரு வலைப்பக்கம் தொடங்கினேன். வருகையாளர்கள் பற்றாக்குறையால் மனம் நொந்துபோய் ஐந்து மாதங்களிலேயே அதை முடக்க நேர்ந்தது. 

மேற்கண்ட பதிவு, ஒரு முன்னணி வார இதழில்[பழையது] வெளியான தகவல் குறிப்பை விமர்சிக்கும் வகையில் அந்தத் தளத்தில் எழுதப்பட்டது.

பதிவு சுருக்கமானது என்றாலும், மூடநம்பிக்கையாளர்களின் மந்த புத்தியில் 'சுருக்' என்று தைக்க வல்லது என்பது என் நம்பிக்கை.

புத்திசாலியான தங்களின் வருகைக்கு நன்றி! ஹி... ஹி... ஹி!!!