வியாழன், 3 நவம்பர், 2022

இந்தப் பூமி மனிதர்களின் 'பூர்வீகம்' அல்ல!?

"மனிதர்கள் மற்ற உயிரினங்களைப் போல் பூமியில் தோன்றவில்லை; இங்கிருந்த ஏதோவொரு உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடையவுமில்லை.
விண்ணிலிருந்து வந்த விண்கற்கள் பூமிக்கு நுண்ணுயிரிகளைக் கொண்டுவந்தன. அந்த உயிரிகளில் ஒன்றிலிருந்து மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்" என்கிறார், 'எல்லிஸ் சில்வர்'[Ellis Silver] என்னும் அமெரிக்கச் சூழலியல் நிபுணர்[விஞ்ஞானி].

எனவே, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வேறு எங்கோ இருந்து வந்தவர்கள் மனிதர்கள் என்றாகிறது.


இந்தக் கருதுகோளை உறுதிப்படுத்தும் வகையில், 'இவ்வுலகில், மனிதர்களைப் பாதிக்கும் சில நாட்பட்ட நோய்கள் உள்ளன. மனிதர்கள்[மூல உயிரினமாக] பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்தார்களோ, அந்த இடத்தில் நிலவிய குறைந்த அளவிலான ஈர்ப்பு விசையே காரணமாக இருந்திருக்க வேண்டும்' என்கிறார் அவர்.


'இந்தக் கிரகத்தில்[பூமி] மனிதப் பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தலை பெரிதாக[Large] உள்ளதால், பிள்ளை பெறுவதில் அவர்கள் சிரமப்படுகிறார்கள். வேறெந்த உயிரினமும் இப்படிச் சிரமப்படுவதில்லை[இதுவும் மனிதர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது'] என்று குறிப்பிட்டும் தம் கருதுகோளுக்கு ஆதாரம் சேர்க்கிறார் இந்த அறிவியல் அறிஞர்.


"பூமியில் ஒரு நாள் கால அளவு 24 மணிநேரம் மட்டுமே. ஆனால், ஒரு நாளுக்கான கால அளவு 25 மணி நேரத்தை உள்ளடக்கியதாக மனிதர்கள் உணருகிறார்கள். இதனால் நமக்குப் பல உடல்நலப் பிரச்சனைகள் உருவாகின்றன[மூலத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை]" என்று குறிப்பிட்டுத் தம் அனுமானத்தை உறுதிப்படுத்த முயல்கிறார் 'எல்லிஸ் சில்வர்'. -'stylemania.it' -30.10.2022]

==============================================================
அறிவிப்பு: என்னால் புரிந்துகொள்ள முடிகிற ஆங்கிலத்திலான அறிவியல் செய்திகளைத் தமிழில் தரும் ஆர்வம் காரணமாக உருவானது இந்தப் பதிவு. தமிழாக்கத்தில்[நேரடி மொழிபெயர்ப்பு அல்ல] போதிய தெளிவின்மை காணின் பொறுத்தருள்க[ஆங்கில மூலம் கீழே]!

முற்றிலும் புதிதான செய்தி என்பதால் பகிரப்படுகிறது.

வருகைக்கு நன்றி!
#According to science, people do not come from the Earth

According to science, life arrived on Earth by means of meteorites. These meteorites brought microorganisms that later evolved. But not everyone agrees.

According to Ellis Silver, an American ecologist, people did not evolve along with other life forms on Earth, but arrived somewhere tens or hundreds of thousands of years ago.

In support of this hypothesis, Silver argues that some of the chronic diseases that afflict humans may be a sign that we have evolved in a world with a lesser force of gravity.

Another fact supporting the thesis that the scientist points to are some unique human traits: for example, babies' heads being so large that it is difficult for women to give birth is a sign. "No other species on this planet has this problem," the scientist states.

Silver says, "I think many of our health problems stem from the simple fact that our internal biological clocks have evolved to perceive a 25-hour workday, even though a day on Earth lasts only 24 hours," the scientist writes."# [stylemania.it] - 17h ago

========================================================================