வெள்ளி, 4 நவம்பர், 2022

'மாவீரர் அலெக்சாண்டர் உயிருடன் புதைக்கப்பட்டார்'... 'பிபிசி' செய்தி!

'அலெக்சாண்டர் தி கிரேட்' என உலக வரலாற்றாய்வாளர்களால் போற்றப்பட்டு வந்த பேரரசர், கி.மு 323இல் பாபிலோனில் இறந்ததை வரலாற்றுப் பாட நூல்களில் படித்திப்போம். அவர் மர்ம நோயால் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார் அல்லது நோய்வாய்ப்பட்டு 32 வயதில் இறந்தார் என்றும் பல கதைகள் நமக்குச் சொல்லப்பட்டிருக்கலாம்...... அலெக்சாண்டரின் கடைசிக் கால வாழ்க்கையை மிக ஆழமாக ஆய்வு செய்த நியூசிலாந்தின் 'ஒட்டேகோ' பல்கலைக்கழகத்தின் டுன்டின் மருத்துவக் கல்வி நிறுவன மூத்த விரிவுரையாளர் 'டாக்டர் ஏ. கேத்ரைன் ஹால்' தரும் தகவல் பேரதிர்ச்சி அளிக்கத்தக்கது' என்கிறது 'பிபிசி' தமிழ்ச் செய்தி https://www.bbc.com/tamil/global-58367105

GBS ஒரு சுயத் தடுப்பாற்றல் கோளாறு ஆகும். இதில் ஒருவரின் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் புற நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான திசுக்களைத் தாக்குகிறது. தசை அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளையும், வலி, வெப்பம், தொடு உணர்வுகளைக் கடத்தும் நரம்புகளையும் இந்நோய்த் தாக்கம் பாதிக்கிறது. இதன் விளைவாகத் தசை பலவீனம், உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் சில வேளைகளில் முடக்குவாதமும் ஏற்படும்.

 

சிலர் முற்றிலுமாக இந்நோயில் இருந்து குணம் பெறுவர். ஆனால் சிலருக்கோ நீடித்த நரம்புச் சிதைவு ஏற்படும். இந்த நோய், சிக்கல்களால் 3%-5% நோயாளிகள் இறக்க நேரிடலாம். மூச்சைக் கட்டுப்படுத்தும் தசைகளில் வாதம், இரத்தத் தொற்று, நுரையீரலில் இரத்த உறைவு, இதயச் செயலிழப்பு ஆகியவை இச்சிக்கல்களில் அடங்கும்.


இந்நோய்க்கான காரணம் தெரியவில்லை. ஆனால், இரைப்பைக் குடல் தொற்று அல்லது நுரையீரல் தொற்று போன்ற ஒரு தொற்று நோயினால் இது குறிப்பாகத் தூண்டபடுகிறது.

 

இந்தப் பாதிப்புகள் அனைத்தும் ஆலெக்சாண்டருக்கு இருந்தது தமது ஆய்விலும் தெரிய வந்ததாகக் கூறுகிறார் டாக்டர் கேத்ரைன் ஹால்.

 

நரம்பு மண்டலத்தில் உள்ள ஆரோக்கியமான செல்களை நோய் எதிர்ப்பு அமைப்பு தாக்கும் ஓர் அரிய, ஆனால் தீவிரமான தன்னுடல் தாக்கக் கோளாறுதான் இந்த ஜிபிஎஸ்.

 

நுண் கிருமியான கேம்பிலோபாக்டர் பைலோரியின் தொற்றால் அலெக்சாண்டருக்கு இந்தக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்


கேத்ரைனின் கூற்றுப்படி, அலெக்சாண்டரைத் தாக்கிய ஜிபிஎஸ் திரிபு, அவரை எவ்விதக் குழப்பமான நிலைமைக்கும் ஆளாக்காமலும் மயக்கநிலைக்குக் கொண்டுசெல்லாமலும் இயல்பாகவே பக்கவாதத்தை உண்டாக்கியிருக்கிறது.


அந்தக் காலத்தில், தற்கால மருத்துவர்கள் நாடித்துடிப்பைக் கணக்கிட்டு ஒருவருடைய உடலில் உயிர் உள்ளதா என்பதை அனுமானிக்காமல், பாதிக்கப்பட்டவரின் சுவாசத்தை வைத்தே அவர் இறந்தாரா வாழ்கிறாரா என்ற முடிவுக்கு வரும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.

 

அந்த வகையில் தீவிர முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அலெக்சாண்டர், கண்கள் மூடிய நிலையிலேயே இருக்க அவருக்குக் குறைவான பிராணவாயுவே தேவைப்பட்டது. அதனால், அவரது உடல் அசைவற்றும் இடைவிட்டு மூச்சு விடுவதும் தொடர்ந்தது.


அதனால், அவரது மூச்சு நின்றுபோனதாகக் கருதி அவர் இறந்து விட்டதாக அந்தக் காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள் அறிவித்தது, அவர் உண்மையில் இறக்கும் முன்பாகவே புதைக்கக் காரணமாகியிருக்க வேண்டும் என்று தாம் நம்புவதாகக் 'கேத்ரைன்' கூறுகிறார்.

 

அலெக்சாண்டரின் வாழ்க்கை வரலாறு திருத்தி எழுதப்படுமானால், அதுவே, அந்தக்காலத்தில் நரம்பியல் மண்டலக் குறைபாட்டின் தாக்கம் ஏற்பட்ட ஒருவருக்குத் தவறாக மரணம் கணிக்கப்பட்ட முதல் நிகழ்வாக இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக