இந்த அதிசயம் நிகழ்ந்தது 'சத்தீஸ்கர்' மாநிலத்தில்.
சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டின் பின்புறத்தில், எட்டு வயது 'தீபக்' மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நாகப்பாம்பு திடீரென்று அவனது கையைச் சுற்றியது; தன் கோரப் பற்களால் கடித்தது.
பாம்பை உதறும் முயற்சியில் தீபக் தோல்வியுற்றான். ஆயினும், ஏதோவொரு உந்துதல் காரணமாக அந்த நாகப்பாம்பை அவன் கடித்தான். சிறிது நேரத்தில் அது இறந்தது.
இது குறித்து, "பாம்பு என் கையைச் சுற்றிக்கொண்டு என்னைக் கடித்தது. எனக்கு மிகுந்த வலி ஏற்பட்டது. நான் அதை அசைக்க முயன்றபோது அது அசையாததால், நான் அதை இரண்டு முறை கடுமையாகக் கடித்தேன். இது அனைத்தும் சில நொடிகளில் நடந்தன" என்றான் அவன்.
சிறுவனின் குடும்பத்தினர் அவனை மருத்துவ மையத்திற்குக் கொண்டுசென்றனர், அங்கு அவனுக்கு 'விஷ முறிவு மருந்து' செலுத்தப்பட்டு ஒரு நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டான்.
தீபக்கின் காயத்தை பரிசோதித்ததில், அவனுக்கு "உலர்ந்த கடி" ஏற்பட்டதாக மருத்துவர்கள் முடிவு செய்தனர்; அதாவது, நாகப்பாம்பு எந்த விஷத்தையும் வெளியிடவில்லை.
சிறுவன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினான்[India Today Web Desk - 5h ago]
*****"நாகப் பாம்பை நாக தேவனாக்கிக் கோயில் கட்டி வழிபடும் 'கும்மாச்சி'களுக்கு இந்தப் பதிவு காணிக்கை!