“இந்துக்கள் நம்புவது போல் 36 கோடிக் கடவுள்கள் இல்லை. கிறிஸ்தவராக மாறினால் மட்டுமே கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும்” என்று கூறி, கர்னாடகா மாநிலத்தின் துமகுரு மாவட்டத்தில் இந்துக்களை வலுக்கட்டாயமாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக இரண்டு சிறுமிகள் உட்பட மூன்று இளம் கிறிஸ்தவ மதபோதகர்கள்[மிஷனரிகள்] மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர். -இது அண்மைச் செய்தி[டைம்ஸ் நவ்].
எந்தவொரு மதத்தவரும் அறிவியல்பூர்வமாக, கடவுள் என்றொருவர் இருப்பதாக நிரூபித்ததில்லை. உண்மை இதுவாக இருக்க, கிறிஸ்தவர்களின் கடவுளான கர்த்தர் மட்டுமே உண்மையான கடவுள் என்று கூறிய இந்த, மத போதைக்குள்ளான போதகர்கள் நம் அனுதாபத்திற்கு உரியவர்கள்.
“வறியவருக்கு வயிறாரச் சோறு போட்டு உங்களின் மதத்தைப் பரப்பிட முயலுங்கள். மாறாகக் கடவுளின் பெயரைச் சொல்லி அதைச் செய்யாதீர்கள்” என்பதே இவர்களுக்கு நாம் வழங்கும் ஆலோசனை.
மதங்களென்ன, கடவுள்களே இல்லை என்று மக்கள் புரிந்துகொள்ளும் காலம் வரும்..... வரும்..... வரும்!!!
* * * * *
பக்திப் பித்தேறிய பாதிரியின் பரிதாப மரணம்:
#ஆப்ரிக்கா ஜாம்பியாவில்
பாதிரியார் ஒருவர், தான்
மண்ணில் புதைக்கப்பட்டால், ஏசுவைப் போல மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்து வருவதாகக் கூற, இரண்டு பாதிரியார்கள் அவரை மண்ணில் புதைத்துள்ளனர். இந்த விசயம் வேறு யாருக்கும் தெரியாது.
இந்நிலையில் பாதிரியார் மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியிலுள்ள கிராம மக்களுக்குத் தெரிந்தவுடன் அவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் பாதிரியாரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிரியாருக்கு உதவி செய்த இரண்டு ஊழியர்கள் தலைமறைவானதைத் தொடர்ந்து அந்த இரண்டு ஊழியர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்# Source : one India
https://kathir.news/news/breakingnews-kathirnews-misiionary-superstetious-1200633===============================================================================