ஞாயிறு, 18 டிசம்பர், 2022

தன் மரணத்தின் பின் மதச் சடங்கை அனுமதிக்காத இஸ்லாம் இளைஞன்!!!

‘மஜித்ரேசா ரஹ்னவார்ட்’[Majidreza Rahnavard] ஈரான்காரர்; இஸ்லாமியர்.

இவர், திங்கள்கிழமை, அதாவது டிசம்பர் 12, 2022 அன்று ஈரான் அரசை எதிர்த்துப் போராடியதற்காக[நான்கு மாதங்களுக்கு முன்பு, 22 வயதான மஹ்சா அமினியின் மரணம் தொடர்பாக நீதி கோரி இந்தப் போராட்டங்கள் தொடங்கப்பட்டன]ப் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

மரணத்தைத் தழுவவிருந்த அந்தத் தருணத்திலும், மரண பயத்தை உதறித் தள்ளிய இந்த மாவீரன், "எனது கல்லறையில் யாரும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டாம். எவரும் குர்ஆன் படிப்பதையோ,  பிரார்த்தனை செய்வதையோ நான் விரும்பவில்லை" என்று கூறியிருப்பதோடு, “அதற்குப் பதிலாக என் மரணத்தைக் கொண்டாடுங்கள்; இன்னிசைகளை எழுப்பி மகிழுங்கள்” என்று உறுதிபடச் சொல்லியிருப்பது, உலக அளவிலான மக்கள் மனங்களில் பெரும் கிளர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது.

மருட்டும் தூக்குக் கயிறு கண் முன்னே ஊசலாடிக்கொண்டிருந்த அந்த நேரத்திலும், சாவைத் துச்சமாக மதித்து, “மக்கள் மதங்களைப் புறக்கணிக்க வேண்டும். கடவுள் எனப்படுபவரை நினைந்து பிரார்த்திப்பது தேவையற்றது” என்று உலகறிய அறிவித்த இந்த இஸ்லாமிய இளைஞனின் மன உறுதியை ஒட்டுமொத்த உலகமும் போற்றிடக் கடமைப்பட்டுள்ளது.

மதச் சார்பைத் துறந்த இந்த மாமனிதனின் நினைவு நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

மனித நேயம் மட்டுமே மனித குலத்தை வாழவைக்கும் என்று நம்புகிறவர்களின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

'Don't read Quran or pray, just celebrate and not mourn my death': Iranian man records last words before being hanged to death

=========================================================================