ஆண்கள் பெண்களை வன்புணர்ச்சி செய்து சீரழிக்கவும், கொலை செய்வதற்குமான காரணங்கள் பலவாக உள்ளன.
உலக அளவில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள்[பால் மணம் மாறாத குழந்தைகள் உட்பட] இக்கொடுமைக்கு உள்ளானபோதும், அந்தப் பெருமளவிலானவர்களில் பெரும்பாலோர் காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்வதில்லை என்பது மிகப் பெரிய சோகம்.
பெண் வன்புணர்வு செய்யப்பட்டதைப் பிறர் அறிந்தால் சம்பந்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று பெண்ணைப் பெற்றவர்கள் அஞ்சுவது இதற்கான மிக மிக முக்கியமான காரணம் ஆகும்.
காவல்துறையினர் தம் கடமையை சரிவரச் செய்யாத காரணத்தால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள். வழக்குத் தொடுப்பது வீண் வேலை என்று பாதிக்கப்பட்டவர்கள் நினைப்பதும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.
காரணங்கள் சிலவோ பலவோ, உலக அளவில் வன்புணர்வுக்கு உள்ளாவோரில் பலரும் காவல் நிலையங்களுக்குச் செல்வதையோ, நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பதையோ தவிர்க்கிறார்கள் என்பதற்குக் கீழ்க்காணும் புள்ளிவிவரம் ஆதாரமாக உள்ளது.
நாடுகளும் வழக்குப் பதிவு செய்வோரின் விழுக்காடும்:
ஆஸ்திரேலியா:
30 சதவீத பெண்கள் மட்டுமே காவல்துறையில் வழக்கு பதிவு செய்கின்றனர்.
டென்மார்க் மற்றும் பின்லாந்து:
13 சதவீத பெண்கள் மட்டுமே இந்த கொடுமைகளை போலீஸில் சொல்கின்றனர்.
நியுசிலாந்து
பிரிட்டனின் மருத்துவ இதழான லான்செட்டின் அறிக்கைப்படி நூறில் ஒன்பது சதவீத வழக்குகளே நியுசிலாந்தில் பதிவாகியுள்ளது. அவற்றில் 13 சதவீத வழக்குகள் மட்டுமே தண்டனை பெறும் குற்றங்களாக உள்ளன. கிட்டத்தட்ட 91 சதவீத கற்பழிப்பு குற்றங்கள் கணக்கிலேயே இல்லாமல் போகிறது.
கனடா
புள்ளி விவரங்களின்படி 6 சதவீத குற்றங்கள் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகின்றன.
இந்தியா
உலகின் பிற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் பெரும்பாலான கற்பழிப்புகள் பதிவு செய்யப்படுவதில்லை. ’மடிஹா கார்க்’ என்பவரின் கூற்றுப்படி இந்தியாவில் 46 சதவீத கற்பழிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. அதே சமயம் ’மிஹிர் ஶ்ரீ வாஸ்தவா’ என்னும் பத்திரிக்கையாளர் கூற்றுப்படி 10 சதவீத கற்பழிப்புகள் மட்டுமே இந்தியாவில் பதிவு செய்யப்படுகின்றன.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்:
பிரபல பத்திரிக்கை நிறுவனமான பிபிசி வெளியிட்ட அறிக்கையின்படி, இங்கிலாந்தில் அதிகப்படியான பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மொத்தமாக நடக்கும் குற்றங்களில் 29 சதவீதம் பாலியல் குற்றங்களாக உள்ளன.
அமெரிக்கா:
அமெரிக்காவில் 68 சதவீத மக்கள் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வழக்குப் பதிவு செய்வதில்லை. 32% மட்டும பதிவு செய்யப்படுகின்றன.
தென்னாப்பிரிக்கா:
பாலியில் குற்றங்கள் புரியும் நாடுகளில் இது முதலிடம் வகிக்கிறது. அங்கு நடக்கும் 9 கற்பழிப்புகளில் 1 மட்டுமே பதிவு செய்யப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.
ஸ்வீடன்:
கற்பழிப்புக் கொடூரச் செயலில் இது 2ஆம் இடம் பெற்றுள்ளது. அதனால், ஸ்வீடன் பெண்கள் வாழ்வதற்கு உகந்த நாடு அல்ல என்று சொல்லப்படுகிறது ஐரோப்பாவைவிடவும் கூடுதலான விகித அளவில் ஸ்வீடனில் கற்பழிப்புகள் நிகழ்கின்றனவாம்.
ஜிம்பாப்வே:
மேற்கண்ட நாடுகளைவிடவும் இங்கு பாலியல் குற்றங்கள் உள்ள குறைவாகவே இடம்பெறுகின்றன.
ஜிம்பாப்வேயின் கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அங்கு பாலியல் பலாத்காரம் செய்யபடுகிறார். சமீபத்திய புள்ளி விவரங்கள் படி ஒரு மாதத்திற்கு சராசரியாக 500 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
ஆக, பெண்களுக்கு நிகழ்த்தப்படும் வன்கொடுமை நிகழ்வுகள் அதிகரிப்பதற்கான இரண்டு முக்கியக் கரணங்கள்:
1.பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் தயங்காமல், உரிய நேரத்தில் வழக்குப் பதிவு செய்யத் தயங்குவது.
2.குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் காவல்துறையினர் கையாளும் மெத்தனப்போக்கும், அவர்களின் இயலாமையும்.
3.வழக்கு விசாரணயில், குற்றவாளி யாரென்பது தெரிந்தும் அவனை அடையாளம் காட்டிச் சாட்சி சொல்வதில் பொதுமக்கள் காட்டும் அலட்சியப்போக்கு.
===================================================================
புள்ளிவிவர உதவி: https://tamil.samayam.com/viral-corner/omg/top-10-unsafe-countries-for-women/articleshow/76553166.cms