அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 7 டிசம்பர், 2022

அதென்ன ‘பாம்பே O' ரத்த வகை?!

'பாம்பே o' பிரிவு ரத்தம் மிகவும் அரிதான ஒன்று. இது இரண்டரை லட்சம் மக்களில் ஒருவருக்கு மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்திய நாட்டில் முதன் முதலில் இந்த 'HH பிரிவு' இரத்த வகையானது, 1952ஆம் ஆண்டு மும்பையில் கண்டறியப்பட்டதால் இதற்குப் ’பாம்பே இரத்தப் பிரிவு’(Bombay Blood Group) என்று அப்போது பெயரிட்டனர்.

பொதுவாக 'O' பிரிவு ரத்தத்தை `யுனிவர்சல் டோனர்’ என்பார்கள். அதாவது, `A’, `B’, `AB’ ஆகிய அனைத்து ரத்தப் பிரிவினருக்கும் ‘O' ரத்தத்தை ஏற்ற முடியும். ஆனால், `HH’ ரத்தப் பிரிவு[பாம்பே ‘o’] உள்ளவர்களுக்கு இதைக்கூட ஏற்ற முடியாது[bbc.com]

கர்ப்பிணிக்கு தேவைப்பட்ட அரியவகை ரத்தம் - உதவி செய்த புதுச்சேரி காவலர்

பத்து லட்சம் பேர்களில் நால்வருக்குத்தான் இந்த ரத்தவகை இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 179 பேருக்கு இந்த ரத்தப் பிரிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் மும்பையில் மட்டும் 35 பேர் இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் 12 பேரும் மற்றவர்கள் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

இந்த ரத்த வகையைப் பற்றி விரிவாக விளக்குகிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ‘ரத்தவங்கி’த் துறைத் தலைவர் மருத்துவர் சுபாஷ் அவர்கள்.

"இந்த ரத்தப் பிரிவை, 1952ஆம் ஆண்டு பம்பாயில், டாக்டர் பெண்டே(Dr. Y. M. Bhende) என்பவர்தான் முதன்முதலில் கண்டறிந்தார். அதனால் இது, `பாம்பே குரூப்’ என்று அழைக்கப்படுகிறது. மரபணுக்கள்தான் ரத்தப் பிரிவுகளைத் தீர்மானிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மரபணு இருப்பவர்களிடம் மட்டும்தான் இந்த ரத்தவகை இருக்கும். பம்பாயில் சில குறிப்பிட்ட மக்களிடம் இது ஆரம்பகாலத்தில் இருந்தது .

இப்போது அனைத்துப் பகுதிகளிலும் இந்தப் பிரிவு ரத்தம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். மற்ற பிரிவுகளைக்கூட, தவிர்க்க முடியாத சில நேரங்களில் மாற்றி ஏற்றிக்கொள்ளலாம். ஆனால், 'பாம்பே குரூப்' உள்ள ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டால், மற்ற எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்ற முடியாது.

‘பாம்பே குரூப்’ உள்ளவர்கள் வருடத்துக்கு ஒருவர் அல்லது இருவர்தான் எங்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வருகிறார்கள். இதே ரத்தப் பிரிவில் உள்ள பத்து நபர்கள் எங்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த வகையைச் சேர்ந்த யாராவது வந்து அட்மிட் ஆனால், அவர்களுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லுவோம். அவர்களில், யாராவது ஒருவர் வந்து ’ரத்தத் தானம்’ செய்வார். சென்னையில் மூன்று பேர் இருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியூர்களில் இருக்கிறார்கள். எந்த ரத்தத்தையும் 35 நாள்களுக்கு மேல் சேமித்துவைத்திருக்க முடியாது. இதன் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்படுவது `HH' வகை ரத்தப் பிரிவினர்கள்தான்" என்றார்[vikatan.com].

========================================================================