அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 8 டிசம்பர், 2022

கூர்மதி இல்லாத கூமுட்டைகளும் ‘சத்குரு’ என்னும் வெற்று மனிதனும்!!!

 ‘சத்குரு பிறந்த இடம் எது?’ என்பது ‘quora.com' இல் கேட்கப்பட்ட கேள்வி.

இதற்கு, ‘ஆரத்தி கொடிகள்’ என்னும் கூமுட்டை அளித்த பதில்.....

//இந்த ஒரு வாழ்நாளில் அவர் 2 பிறவிகள் எடுத்திருக்கிறார் தெரியுமா? முதலில், 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி கர்நாடகாவின் மைசூரில் சாதாரண மனிதராகப் பிறந்தார்.....

அவர் இரண்டாவது முறையாக 1982 செப்டம்பர் 23 அன்று ஞானம் பெற்றபோது, ​​மீண்டும் கர்நாடகாவின் மைசூருவில் சாமுண்டி மலையில் பிறந்தார்//

‘ஒரு பூ மலர்வதைப் போல, ஞானம் பெறுதல் நிகழ்கிறது’ என்று ஜக்கி சொல்லியிருப்பதை அவரின் படத்துடன் பதிவு செய்திருக்கிறார்[கீழே] அந்த அம்மையார்.

ஞானியாம் ஞானி!

இந்த ஞானி 2 பிறவிகள் எடுத்தாராம்.

மனிதனாகப் பிறந்த ஒருவர், அவர் எவ்வளவு பெரிய ஞானி என்று பெயர் பெற்றிருந்தாலும் அவருக்கும் சாவு என்பது 100% நிச்சயம்.

சாமுண்டி மலையில் 2ஆவது பிறவி எடுத்தார் என்றால், முதல் பிறவி எடுத்த அவர் 2ஆவது பிறவி எடுப்பதற்கு முன்பு செத்திருக்க வேண்டும்.

சாமுண்டி மலையில்தான்[2ஆம் பிறவி எடுப்பதற்கு முன்பு] செத்தாரா, வேறு எங்குமா?

செத்த அடுத்த நொடியே மறுபிறவியா, அல்லது, கொஞ்ச நாள் செத்த இடத்திலேயே சீந்துவாரற்றுக் கிடந்தாரா?[பிறர் கண்ணில் பட்டிருந்தால் குழு தோண்டிப் புதைத்திருப்பார்கள்].

ஞானியாம் ஞானி!

இந்த ஞானி நம்மையெல்லாம் போல ஊணுறக்கம் கொள்ளாமலே உயிர் வாழ்கிறாரா?

மற்ற எளிய மனிதர்களுக்குப் பசி எடுப்பது போல இந்த ஞானிக்குப் பசி எடுப்பதில்லையா?

பசித்தால், எதையும் தின்பதில்லையா?

தின்பது ஜீரணமானால், மலம் கழிக்கிறாரா, அல்லது மலத்தை காற்றில் ஆவியாகக் கரையச் செய்கிறாரா?

மலத்தைச் சற்றுத் தாமதமாகக் கழித்தால் அது நாறுகிறது.

இந்த ஞானியின் மலம் மல்லிகை மலர் போல் கமகம என்று மணக்குமா?

இவரின் சிறுநீர் நறுந்தேன் போல சுவைக்கச் சுவைக்க இனிக்குமா?

என்னய்யா ஞானம்? வெங்காய ஞானம்?

பிரபஞ்சத் தோற்றம் ஏன்? உயிர்கள் பிறப்பது ஏன்? இறப்பது ஏன்? இன்பதுன்பங்களெல்லாம் எதற்கு?

தோன்றிய பிரபஞ்சம் அழியுமா? எப்போது? எப்போதும் இருந்துகொண்டே இருக்குமா?

இத்தனை கேள்விகளுக்கும் விடை கண்டு சொன்னவர் எவருமில்லை.

இப்படி இன்னும் எத்தனையோ புரியாத கேள்விகள் மனித இனத்தைத் திணறடித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றில் எத்தனை கேள்விகளுக்கு இந்த ஞானி விடை கண்டறிந்து சொல்லியிருக்கிறார்?

இவர்தான் தன்னைப் பிறவி ஞானி என்கிறார் என்றால், அதை வழிமொழிகிற கூமுட்டைகள் உலகெங்கும் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கொஞ்சமும் சிந்திக்கிற அறிவு இல்லை.

இந்த எண்ணிக்கை பெருகுகிறது. விளைவு.....

இந்த ஞானி கோடிகளில் புரள்கிறார்.

தினம் தினம் விதம் விதமாய் உடைகள்; விலையுயர்ந்த பைக்குகள், பறக்கும் வானூர்திகள் என்று உலகை வலம்வந்து குதூகளிக்கிறார்.

கூமுட்டைகள் கூமுட்டைகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்!

==========================================================================