//எகிப்து நாட்டின் நைல் நகரில் உள்ள செல்லப்பிராணிகள் விற்பனை நிலையத்தில்தான் அந்த வினோதமான நிகழ்ச்சி இடம்பெற்றது. அது.....
கடைக்கு வந்திருந்த ஒரு பெண்[இளசுதான்], குரங்கின் அழகில் லயித்துப்போய் அதை வெகுவாக ரசித்திருக்கிறார்; தொட்டுத் தடவி விளையாடியிருக்கிறார்; திடீரென விசித்திரமானதொரு உணர்ச்சித் தூண்டுதலால் குரங்கின் பிறப்புறுப்பை[ஆண் குரங்கு!]ச் சீண்டியிருக்கிறார். அதில் இனம்புரியாதவொரு சுகம் கிட்டவே தொடர்ந்து சீண்டிக்கொண்டிருந்தார்.
அந்தப் பெண்ணுடன் கடைக்குச் சென்றிருந்த அவளின் நண்பன் அந்த நிகழ்வைக் காணொலியாக்கியதோடு[விளையாட்டாகத்தான்], சமூக ஊடகங்களிலும் பகிர, அது பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட நிலையில், அந்த நாட்டுப் போலிஸ்காரர்களும் பார்த்திருக்கிறார்கள்; வழக்கும் தொடுத்தார்கள்.
நீதிபதி அவளுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்// என்பது https://tamil.news18.com/news/trend/egyptian-woman-jailed-for-sex-attack-on-monkey-in-pet-shop-88459.html?amp_js_v=a6&_gsa=1&usqp=mq331AQKKAFQArABIIACAw== செய்தி.
இந்தச் செய்தி நம்மைப் பெரும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது என்பது உண்மை.
இந்த நிகழ்ச்சி பெண்ணுக்கும் குரங்குக்கும் மட்டுமே சம்பந்தப்பட்டது. தன் பிறப்புறுப்பு சீண்டப்படும்போது, அதனால் குரங்குக்குப் பாதிப்பு ஏதும் உண்டாகியிருந்தால் அது நிச்சயம் அந்தப் பெண்ணைக் கடித்திருக்கும்[ஹி... ஹி... ஹி!!!] அது நடவாத நிலையில் போலீஸ்காரர்கள் ஏன் வழக்குத் தொடுத்துப் பெண்ணுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்?
அவர்கள்தான் புத்தி கெட்டு இதைச் செய்தார்கள் என்றால், பெண்ணுக்கு 3 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்த நீதிபதிக்குமா புத்தி இல்லை?//
நல்ல நாடு[எகிப்து]! நல்ல போலீஸ்!! நல்ல நீதிபதி!!!
‘அன்வர்’ என்பவருக்குத் திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகியிருந்தன.
ஒரு திங்கள் கிழமை நாளில், இரவு நேரத்தில் தன் மனைவியை உடலுறவுக்காக எழுப்பினார். அவரும் சம்மதித்தார். அன்வர் அனுபவித்தார்.
சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் உடலுறவு கொள்ள விரும்பினாராம். மனைவியோ மறுத்துவிட்டாராம்.
அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த அன்வர், கயிற்றால் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொன்றார். பின்னர், அவர் பிணத்தை மூட்டைகட்டி, தனது வீட்டில் இருந்து 50 கிமீ தொலைவிலுள்ள ஓர் இடத்தில் வீசியது, அப்புறம் காவல்துறையிடம் பிடிபட்டதெல்லாம் The Times of India செய்திகள்[https://www.msn.com/en-in/news/other/killed-for-refusing-sex-2nd-time-stabbed-after-late-on-date-tale-of-2-couple-scuffles-from-up-hyd/ar-AA154WAw?ocid=msedgdhp&pc=U531&cvid=00e8b9bcae8a47d785557ba31ecc56c8]
நம் மனதில் முகிழ்க்கும் ஆச்சரியம் என்னவென்றால்.....
அன்வருக்குக் கல்யாணம் ஆன 9 ஆண்டுகளில் எத்தனை எத்தனையோ இரவுகள்[பகலிலும்தான்] மனைவியுடன் மகிழ்ந்திருந்திருப்பார். ஓர் இரவில் இரண்டாம் புணர்ச்சிக்கு அவள் மறுத்ததற்காகக் கழுத்தை இறுக்கிக் கொன்றார் என்பது நம்பும்படியாக இல்லையே.
ஒன்பது ஆண்டுகள் அனுபவித்தவருக்கு அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருக்க முடியவில்லையா?[கொலைக்கான வேறு முக்கியக் காரணம் இருத்தல் வேண்டும். மறைத்திருக்கிறார்].
இப்படியெல்லாம் நம்ப முடியாத கூத்துகள் உலகில் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
படித்துச் சிரித்துவிட்டு நம் வழியில் போய்க்கொண்டே இருப்பதுதான் புத்திசாலித்தனம்!
===========================================================================