அவர் பெயர் ‘சாகாவா’; ஜப்பான்காரர்.
அவர் பாரிஸில் படித்துக்கொண்டிருந்தபோது, ’ரெனி ஹர்ட்வெல்ட்’ என்னும் பெயருடைய பெண்ணைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்தார். என்ன காரணம் சொல்லி அழைத்துவந்தாரோ தெரியவில்லை.
தன் வீட்டிற்கு வந்த அந்தப் பெண்ணைக் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டார்; பாலியல் பலாதாரம் செய்தார்; கொலை செய்தார்.
அப்புறம் நடந்ததுதான் விவரிப்புக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சித் தகவல். அது…..
கொல்லப்பட்ட பெண்ணின் உடலுறுப்புகளில் சிலவற்றைத் தின்றாராம்[அழகான குமரிப் பெண்களின் மாமிசம் வெகு சுவையாக இருக்கும் என்று நினத்திருப்பாரோ?].
சடலத்தை ஒரு பூங்காப் பக்கம் அப்புறப்படுத்த முயன்றபோது, பாரீஸ் போலீசிடம் மாட்டிக்கொண்டார்; தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அடுத்து நிகழ்ந்தது மேற்கண்டதைவிடவும் அதிர்ச்சிதரும் நிகழ்ச்சி.
கொஞ்ச நாட்கள் மனநல மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்குத் தகுதியற்றவர்[பைத்தியம்?] என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளிக்க, 1984இல் சொந்த நாடானா ஜப்பானுக்கு அனுப்பப் பட்டார்.
அங்கு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பிரெஞ்சு அதிகாரிகளிடமிருந்து போதிய ஆதாரக் கோப்புகளைப் பெற முடியாததால் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இதன் பிறகு நடந்தது மேலும் பல மடங்கு அதிர்ச்சி தரும் அதிசய நிகழ்வாகும்.
‘இவரின் வாழ்க்கை நிகழ்வை மையக் கருவாக வைத்து, ஜப்பானிய நாவலாசிரியர் ஜூரோ காரா’ என்பவர் எழுதிய "லெட்டர் ஃப்ரம் சாகவா-குன்" என்னும் நூல் 1982இல் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க இலக்கியப் பரிசை வென்றது’ என்பதே அது!
* * * * *
மேற்கண்டது நேற்றைய ஊடக[zee news]ச் செய்தி.
மனித வாழ்க்கை பெரும் விபரீதங்கள் கொண்டதாக மாறிவருகிறது என்ப தற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
இந்தப் பொல்லாத உலகில் இதையும் மிஞ்சுகிற விபரிதங்கள் நிறையவே நடக்கக்கூடும். பாவம் வருங்காலச் சந்ததியர்!!!
==========================================================================