‘இந்தியர்’ என்று ஓர் இனம் எப்போதும் இருந்ததில்லை. மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள், குஜராத்தியர்கள், பஞ்சாபிகள் என்று பல இனத்தவரும் ‘இந்தியர்’ என்னும் பொதுப் பெயரால் தாங்கள் அழைக்கப்படுவதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களும் ‘இந்தியர்’ என்று தாங்கள் அழைக்கப்படுவதை ஏற்றுக்கொண்டு, இந்தியராக, ‘தமிழர்’ என்னும் இனவுணர்வுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இவர்களை ‘இந்தியத் தமிழர்கள்’ என்று சொல்லலாம்.
இந்த இந்தியத் தமிழர்களை, அண்மைக் காலங்களில், ‘நீங்கள் இந்தியராக மட்டுமே இருங்கள்; தமிழராக இருக்கக் கூடாது’ என்று மிரட்டிப் பணியவைக்கும் முயற்சி மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
‘ரவி’ அவர்கள் இந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து அந்த முயற்சி வேகமெடுத்திருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே.
இந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது தமிழர்கள் என்றென்றும் இந்தியர்களாகவே இருப்பதற்குப் பெரிதும் உதவுவதாக அமையும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், 'ஆளுநரைத் திரைமறைவிலிருந்து இயக்குவோர் இதைப் புரிந்துகொள்வது நல்லது' என்னும் பரிந்துரையை அவர்களின் முன்வைப்பது எம்மைப் போன்ற சாமானியக் குடிமகனின் கடமையாகும்.
===========================================================================