புதன், 18 ஜனவரி, 2023

பிரபலங்களைப் பாடாய்ப்படுத்தும் ‘ஆட்டோ இம்யூன்’ குறைபாடு!

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும், நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் ‘ஆன்டி பாடி’களை நோய் எதிர்ப்பு மண்டலம் உருவாக்கும். இவை, நம் உடலிலுள்ள செல்கள், திசுக்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றன.

செல்களையும் திசுக்களையும் பாதுகாக்கிற இந்த  ‘ஆன்டி பாடி’களே நம்முடைய வெள்ளை அணுக்களைக் கிருமிகள் என நினைத்துத் தாக்குவதும் உண்டு.

நோயெதிர்ப்பு மண்டலத்தின் இந்தத் தலைகீழான செயல்பாட்டால் உடலில் பல்வேறு நோய்கள் உருவாகும். இம்மாதிரியான நோய்களைத்தான் ‘ஆட்டோ - இம்யூன் நோய்கள்’ என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

ஆட்டோ - இம்யூன் என்பது ஒரு தனி நோயல்ல. இது ஒரு குறைபாடு மட்டுமே. இந்தக் குறைபாட்டின் காரணமாக உடலில் கணிசமான அளவில் நோய்கள் உண்டாகும்.

இந்நோய்களில் குறிப்பிடத்தக்க சிலவற்றால் தாக்கப்பட்ட சில பிரபலங்கள்:



*பிரபல நடிகை சமந்தாவைத் தாக்கியிருப்பது ‘myositis’ என்னும் நோய். அவருக்குத் தசைகளில் அதிகப்படியான வலி, வீக்கம் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது. இதனால் உடலின் தசைகள் வெகுவாகப் பலவீனமடையும்; வலியும் அதிகமாக இருக்கும்.

*​சல்மான் கானை’ப் பாதித்திருப்பது ஆட்டோ இம்யூன். இவருக்கு இந்தக் குறைபாட்டால் மிக அரிதாக ஏற்படுகிற ‘ட்ரைஜெமினல் நியூரால்ஜியா’(trigeminal neuralgia) என்னும் நோய் பாதித்திருக்கிறது. இந்த நோய் பாதிக்கப்படும்போது முகத்தில் உள்ள நரம்புகளில் கடுமையான வலி உண்டாகும். இந்த வலி மூளைவரை பரவும்.

*ஆட்டோ இம்யூன் நோய் பாதித்த கிம் கர்தஷியான்.

’ரியாலிட்டி டீவி ஷோ’ பிரபலமும் மாடலுமான ‘கிம் கர்தஷியான்’ கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்டோ - இம்யூன் குறைபாடு காரணமாகச் சொரியாஸிஸ் (psoriasis) நோயால் பாதிக்கப்பட்டார்.


*அமெரிக்கப் பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ்: இவர் தனக்கு ஆட்டோ இம்யூன் இருப்பதால் ‘லூபஸ்’ தொற்றியிருப்பதாகக் கூறினார். ‘லூபஸ்’ என்பது சிறுநீரகத்தைப் பாதிக்கும் மிக மோசமான நோயாகும்.

2017 ஆம் ஆண்டு இந்த லூபஸ்

நோயால் சிறுநீரகத் திசுக்களில்

தொற்றுக்கள் ஏற்பட்டு, கடைசி

யில் சிறுநீரக மாற்று அறுவைச்

சிகிச்சை செய்துகொண்டார் இவர்.

*ஆட்டோ இம்யூன் நோய் பாதித்த ‘நிக்கி ஜோன்ஸ்’

பிரபல இந்திய நடிகை ப்ரியங்கா

சோப்ராவின் கணவர் நிக்கி ஜோன்ஸ்.

வருக்கு13 வயதில் ஆட்டோ இம்யூன்

குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.


*அமெரிக்க சூப்பர் மாடலான ‘ஜிகி ஹடிட்’ தனக்கு ஆட்டோ இம்யூன் குறைபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு ஹாஷிமோட்டோ (Hashimoto's Thyroiditis) என்று அழைக்கப்படும் நோய் பாதித்திருப்பதாக இவர் கூறினார்.


இந்தப் பிரச்சினையால் இவருடைய உடலின் மெட்டபாலிசம்[விளக்கம் கீழே] வெகுவாகப் பாதிக்கப்பட்டதாம்.


*அமெரிக்கப் பாடகியும் பாடலாசிரியருமான ‘லேடி காகா’ குறித்து நெட்ஃபிளிக்ஸ் ’காகா’ என்னும் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. அதில் லேடி காகா தனக்கு ஆட்டோ இம்யூன் குறைபாடு இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இவர், ஃபைப்ரோமியால்ஜியா(fibromyalgia) என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இந்த நோயானது மனம். உடல் இரண்டிலுமே விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். இது உடல் தசைகளில் வலி, தூக்கமின்மை, ஞாபக சக்தி பாதிப்பு, வயிற்றுத் தசைகளில் பிடிப்பு ஆகிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.


இப்படி உலக அளவில் பல பிரபலங்கள் இந்த ஆட்டோ - இம்யூன் குறை

பாட்டால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

* * * * *

கீழ்க்காண்பவை ‘ஆட்டோ இம்யூன்’ குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகும்.


*டைப் 1 நீரிழிவு

*ஆர்த்தரைடிஸ்[கீல்வாதம் - மூட்டுகளைப் பாதிக்கும் நோய்]

*ஹைபடைடிஸ்[கல்லீரல் அழற்சி நோய்]

*தைராய்டு பிரச்சினை

*சொரியாசிஸ்

*குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்

*பிசிஓஎஸ்[ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதம் ’பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்’(PCOS) விழிப்புணர்வு மாதமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இது பொதுவாக இனப்பெருக்க வயதுப் பெண்களைப் பாதிக்கும் ஹார்மோன்களின் மாற்றமாகும். இது குறித்துப் பெண்கள் கட்டாயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். பி.சி.ஓ.எஸ்க்கு முறையாகச் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயப் பிரச்சனைகள், எண்டோமெட்டீரியல் புற்றுநோய், கருவுறாமை உள்ளிட்டவைகளை ஏதிர்கொள்ள நேரிடும்]

*மயோசிடிஸ்[சமந்தாவைப் பாதித்திருப்பது]


* * * * *

மெட்டபாலிசம்:

‘‘நாம் உட்கொள்ளும் உணவு, நம்முடைய உடலில் உள்ள செல்லில் ஆற்றலாக மாற்றப்படும் ரசாயனச் செயல்பாடுகளை வளர்சிதை மாற்றம் (Metabolism) என்கிறோம். உடலின் செயல்பாட்டுக்கு மட்டுமல்ல; நாம் சிந்திக்கவும் ஆற்றல் தேவைப்படுகிறது.

தாவரம், விலங்கிலிருந்து மனிதன்வரை அனைத்து உயிர்களுக்கும் ஆற்றலைச் சேமித்து, தேவைப்படும்போது வெளிப்படுத்துவதற்கு மெட்டபாலிசம் தேவை. மெட்டபாலிச நடவடிக்கை நின்றால் உயிர்களின் மூச்சும் நின்றுவிடும். நாம் 2 நாட்கள்வரை சாப்பிடாமல் இருந்தாலும் சேமித்து வைக்கப்பட்ட ஆற்றலை உடல் தானாகவே எடுத்துக் கொள்ளும்.’’

===================================================================

https://tamil.samayam.com/lifestyle/health/celebrities-who-suffered-with-autoimmune-diseases/

articleshow/95450955.cms?story=7