மனிதாபிமானம் குறித்து நிறையவே எழுதுகிறோம்; பேசுகிறோம்.
ஒரு மனிதாபிமானியாகச் சில கணங்களேனும் நாம் வாழ்ந்திருக்கிறோமா?
“இல்லை” என்றால், அதற்கான வாய்ப்புக் கிட்டியபோதெல்லாம் அதை நழுவவிட்டுள்ளோம் என்பது உண்மை.
வறுமை, நோய் போன்றவற்றின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளானோர் உறும் வேதனையை வெறுமனே வேடிக்கை பார்ப்பவர்கள் நாம், அல்லது, “ஐயோ பாவம்” என்று வாயளவில் அனுதாபம் தெரிவித்து, அவர்களைக் கடந்து செல்வதை வழக்கமாக்கிக்கொண்டவர்கள் நாம் என்பதும் உண்மையே.
நம்மைப் போலவே, ‘மனிதம்’ அல்லது ‘மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை அறியாதவர்களாகவும், அறியும் முயற்சியை மேற்கொள்ளாதவர்களாகவும் இருப்பவர்கள் பலர் என்று சொன்னால் அது தவறில்லைதானே?
புற்றுநோயின் தாகுதலுக்குள்ளான ஒரு பெண் தன் தலைமுடியை மழிப்பதற்கு ‘முடி திருத்தும் நிலையம்’ வருகிறார். முடி மழிக்கப்படும்போது கண்ணீர் வடிக்கிறார். காரணத்தை அறிந்துகொண்ட முடி திருத்துநர், அந்தப் பெண்ணின் தலைமுடியை அகற்றிவிட்டு, “வருந்துகிறேன்” என்றோ, “நோய் குணமாகப் பிரார்த்திக்கிறேன்” என்றோ ஆறுதல் சொல்லி வழியனுப்பவில்லை; அதைச் செய்ய அவரால் இயலவில்லை.
பெண்ணின் துயரத்தில் பங்கு பெறுவதன் அடையாளமாகத் தன் தலை முடியையும் அகற்றிக்கொண்ட அவர், மன வேதனையைக் கட்டுப்படுத்த இயலாமல், பெண்ணின் தலையை ஆரத் தழுவிக்கொள்கிறார்.
இது ஒரு காணொலியில் இடம்பெற்ற நிகழ்வு. “இதுதானய்யா மனிதாபிமானம்” என்று சொல்லாமல் சொல்லும் சோக நிகழ்வு.
காணொலி[முகவரி கீழே, பின்னூட்டங்களுடன்]:
https://twitter.com/i/status/1614490728087928838